Wednesday, August 26, 2026

தெஹ்ரான், கும் , மஷ்ஹதில் 40ஆவது இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு நடைபெறவுள்ளது

தெஹ்ரான் — உலக இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளுக் கிடையிலான நெருக் கத்திற்கான உலக மன்றத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்ததன்படி, 40ஆவது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு தெஹ்ரான், கும்  மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் இணையவழி அமர்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக பொதுச் செயலாளர் ஹமீத் ஷஹ்ரியாரி திங்கட்கிழமை தெரிவித்தார். 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140 வெளிநாட்டு விருந்தினர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும், அவர்களில் சுமார் 80 பேர் நேரடியாகக் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார். மேற்கு அசர்பைஜான், குர்திஸ்தான், கோலெஸ்தான் மற்றும் ரஸவி கொராசான் மாகாணங்களிலும் நான்கு மையப் பரவலாக்கப்பட்ட மாநாடுகள் நடைபெறும் என IRNA செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய மாநாடு ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கும். இதில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கலந்துகொள்வார் என ஷஹ்ரியாரி தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வின்போது இஸ்லாமிய நெருக்கத்திற்கான ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட எட்டு நூல்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

நிகழ்ச்சித் திட்டத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு குறித்த அமர்வு, வெளிநாட்டு விருந்தினர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பது, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியால் வழங்கப்படும் இரவு விருந்து மற்றும் கும்மில் உள்ள சமயக் கல்வி நிலையத்தில் நடைபெறும் சிறப்பு கல்வியியல் அமர்வு ஆகியவை இடம்பெறுகின்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக கும்மின் சமயக் கல்வி நிலையத்தில் இத்தகைய கல்வியியல் அமர்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அண்டை மாகாணங்களைச் சேர்ந்த சுன்னி மற்றும் ஷியா அறிஞர்களின் பங்கேற்புடன், ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை, மஷ்ஹதில் மாநாடு நிறைவடையும்.

இஸ்லாமிய ஒற்றுமை, அமைதி, பாதுகாப்பு மற்றும் கூட்டு வலிமை ஆகியவை மாநாட்டில் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக இஸ்லாமிய அடையாளம், ஆட்சி நிர்வாகம், எதிர்ப்புப் பொருளாதாரம், சமகால முன்னேற்றங்கள், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகிய விடயங்களுடன், முஸ்லிம் உலகம் முழுவதும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சமய அறிஞர்களின் பங்கு குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

No comments:

Post a Comment