Friday, October 23, 2026

பாதுகாப்புக் குடையின் முடிவு: மத்திய கிழக்கில் ஆட்டத்தின் விதிகளை மாற்றி வரும் ஹூதிகளும் எதிர்ப்பு சக்திகளின் கூட்டணியும்

ஹூதிகள் ரியாத்தை நோக்கி முன்னேறத் தயாராகி வருகின்றனர்; அதேவேளை, புரட்சிகரப் பாதுகாப்புப் படைகள் அமெரிக்காவை ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் வெளியேற் றுகின்றன.

மொஹமட் லமீன் கபா

அமெரிக்காவின் பாதுகாப்புக் குடை, ஈரானுக்கும் எதிர்ப்பு அணிக்கும் எதிராகப் பாதுகாப்பு வழங்கும் எனப் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட வாக்குறுதியை வளைகுடா எண்ணெய் வளமிக்க முடியாட்சிகளுக்கு நிறைவேற்றத் தவறிவிட்டது. மாறாக, அது “பாக்ஸ் ஜுடைாக்கா” (Pax Judaica) எனப்படும் “யூத ஆட்சியின் கீழான அமைதி ஒழுங்கு” அல்லது “பெரிய இஸ்ரேல்” திட்டம் நனவாகும் சாத்தியத்திற்கு அவற்றை மேலும் ஆளாக்கியுள்ளது.

மோதல்கள் நிறைந்த மத்திய கிழக்கின் அரசியல் அமைப்பு, 1945 முதல் சர்வதேச உறவுகளைப் பிளவுபடுத்தி வந்த வரலாற்று ரீதியாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு உலகக் கண்ணோட்டங்களின் சார்பில் செயல்படும் பல்வேறு தரப்பினரை நமக்கு முன்னிறுத்துகிறது. ஒரு புறத்தில், ஈரானும் எதிர்ப்பு அணியும் உள்ளன. இதில் யேமனின் ஹூதிகள், பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் அடங்குகின்றன. இவை பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பிலிருந்து அமெரிக்காவை அகற்றுவதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. நடைமுறையில், சீனா, ரஷ்யா, வட கொரியா ஆகிய கிழக்கத்திய வல்லரசுகளின் ஆதரவும் இவற்றுக்குக் கிடைக்கிறது.

மறுபுறத்தில், சவூதி அரேபியாவும் அதன் வளைகுடா கூட்டாளிகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தமது நாடுகளில் கொண்டுள்ளதுடன், இஸ்ரேலுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது நிலையை மறைக்கின்றனர். அமெரிக்காவின் பாதுகாப்புக் குடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அரசியல் நகர்வுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதற்குப் பதிலாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒட்டுமொத்த மேற்குலகமும் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றன.

வெள்ளை மாளிகையிலிருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு அவசர முடிவும், தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமான மேலாதிக்க வீழ்ச்சியின் தொடக்கத்தைச் செயற்கையாகத் தாமதப்படுத்துவதையே ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, இது பிரதிநிதிப் போர் (proxy warfare) என்ற கோட்பாட்டின் தெளிவான வெளிப்பாடாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து கிழக்கு–மேற்கு உறவுகளைப் பிளவுபடுத்தி வந்த மோதல் தீவிரமாதல் தர்க்கமும், இருதரப்பினரும் ஒருவரையொருவர் அச்சுறுத்தலாகக் கருதும் மனப்பாங்கும் இதற்குத் தூண்டுகோலாக உள்ளன.

இந்தப் பிப்ரவரி மாதம், சமகால உலகப் புவிசார் அரசியலில் இறுதியானதும் மீளமுடியாததுமான முறிவைக் குறிக்கிறது. மத்திய கிழக்கு இனி ஓரங்கட்டப்பட்ட பிராந்திய நெருக்கடியல்ல; உள்ளூர் அடையாள முரண்பாடுகள் அரங்கேறும் வெறும் களமும் அல்ல. மாறாக, சர்வதேச அதிகார உறவுகளின் ஒட்டுமொத்த அமைப்பையும் மறுசீரமைத்து வடிவமைக்கும் முதன்மையான நிலநடுக்க மையமாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் அதீத வல்லரசு என்ற மாயை, நம் கண் முன்னே அதிர்ச்சியூட்டும் வகையில் சிதைந்து வருகிறது. வாஷிங்டன், டெல் அவிவ், ரியாத் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்த கோட்பாட்டு நிச்சயங்கள், மீளமுடியாத கோட்பாட்டுக் குழப்பத்தில் கரைந்து வருகின்றன.

எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சமச்சீரற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள், நவீன இராணுவ வலிமையின் உலகளாவிய இலக்கணத்தையே முற்றிலும் மறுவரையறை செய்கின்றன. மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களிலிருந்து அமெரிக்க இராணுவ உபகரணங்களைத் தொலைதூரப் பகுதிகளுக்கு அவசரமாகவும் ஒழுங்கற்ற முறையிலும் இடமாற்றுவது, நுட்பமான அல்லது தொலைநோக்குப் பார்வையுடனான தந்திரோபாய நகர்வல்ல. மாறாக, அது கட்டாயப்படுத்தப்பட்ட மூலோபாயப் பின்வாங்கலையும் முழுமையான வீழ்ச்சியையும் பரிதாபகரமாக வெளிப்படுத்துகிறது.

மேற்குலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அமைப்புமுறை அவமானத்தைச் சந்தித்து வருகிறது. ஈரானும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசாக விளங்கிய அமெரிக்காவை, அதன் மேலாதிக்க நிலைப்பாடுகளையும் நீடித்த உலகளாவிய கட்டுப்பாடு குறித்த உரிமைகோரல்களையும் படிப்படியாகக் கைவிடுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கின்றனர்.

யேமன் பொறியும் ரியாத்–டெல் அவிவ் அச்சின் சரிவும்

அக்டோபர் மாதம் முடிவடையும் வேளையில், யேமன் முன்னரங்கம் மேற்குலகின் முழுமையான தொழில்நுட்ப மேன்மை என்ற கோட்பாட்டைத் தீர்மானகரமாகத் தகர்த்திருந்தது. சவூதி அரேபியா நீண்டகாலமாகத் தனது பாதுகாப்புக்கான அடிப்படையாகக் கருதி வந்தது இந்தக் கோட்பாட்டைத்தான்.

அன்சாரல்லா இயக்கம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டப் நீரிணையை முடக்குவதோ அல்லது சர்வதேச கடல்சார் வர்த்தகத்திற்குத் தடைகளை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஹூதிகள் இப்போது தீர்மானகரமான முன்னேற்றத்தின் மூலம் ரியாத்தை நேரடியாக அச்சுறுத்துகின்றனர். இதனால் வாஷிங்டன் வழங்கியிருந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாதுகாப்பு உத்தரவாதங்கள் காலாவதியானவையாகவும் பொருளற் றவையாகவும் மாறியுள்ளன.

சிக்கலான மேற்கத்திய ஆயுதங்களை வாங்குவதற்காகச் செலவிட்ட பெரும் தொகைகள், நடைமுறை இராணுவ நடவடிக்கைகளில் பயனற்றவையாக இருப்பதைக் கண்டு சவூதி அரேபியா அதிர்ச்சியடைந்துள்ளது. குறைந்த செலவிலான தன்னாட்சி இயங்குதளங்கள் மூலம் நடத்தப்படும் பெருமளவிலான தொடர்ச்சித் தாக்குதல்களுக்கு அதன் உயிர்நாடியான எண்ணெய் உள்கட்டமைப்பு இன்னமும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளது.

இருதரப்புக் கூட்டணிகள் வளைகுடா முடியாட்சிகளை இனி பாதுகாக்கவில்லை. பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான “மக்கா” ஒப்பந்தம் போன்ற முத்தரப்புக் கூட்டணிகளும் பாதுகாப்பு குறித்த வெறும் மாயைகளே. ரியாத்தை நோக்கி ஹூதிகளின் போர்ப் படை முன்னேறுவதைத் தடுப்பதற்காகப் பாகிஸ்தான் ஆதரவு வழங்குவதாகக் காட்டிக்கொண்டாலும், இத்தகைய ஒப்பந்தங்களின் பாதுகாப்புத் திறன் கேள்விக்குறியாகவே உள்ளது.

சவூதி அரேபியாவின் இராஜதந்திரம், கட்டுப்படுத்தப்பட்ட பீதிக்கும் பேரரசு சார்ந்த தந்திரோபாயச் சரணாகதிக்கும் இடையில் பரிதாபகரமாக ஊசலாடுகிறது.

அதேவேளை, இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத மூலோபாய மற்றும் இராஜதந்திரத் தனிமையை எதிர்கொள்கிறது. இஸ்ரேலிய இராணுவம் ஒரே நேரத்தில் பல முன்னரங்குகளில் தொடர்ச்சியானதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதுமான தேய்மானத்தைச் சந்தித்து வருகிறது.

திரளாக வரும் தாக்குதல் ட்ரோன்களுக்கும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணைகளுக்கும் எதிராக டெல் அவிவின் ஏவுகணைத் தடுப்புக் கவசம் தோல்வியடைந்து வருகிறது. குறுகிய காலத்தில் வெற்றிபெறும் போரையே இலக்காகக் கொண்டிருந்த கோட்பாடு நடைமுறையில் சரிந்துவிட்டது.

தனது சொந்த மூலோபாய இராணுவ இருப்பைக்கூடத் தக்கவைத்துக்கொள்ள முடியாத அமெரிக்கப் பாதுகாவலரால் கைவிடப்பட்ட நிலையில், டெல் அவிவ் தவிர்க்க முடியாத வகையில் மிகப்பெரிய இருத்தலியல் முட்டுக்கட்டைக்குள் மூழ்கி வருகிறது.

பாஸ்தரானின் கடல்சார் மேலாதிக்கமும் வாஷிங்டனின் கட்டாயப் பின்வாங்கலும்

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), அணுகலை மறுக்கும் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் எதிரியின் செயல்பாட்டைத் தடுக்கும் மூலோபாயத்தை மிகுந்த துல்லியத்துடன் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பிரம்மாண்டமான அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் அணிகள் இனி சர்வதேசக் கடற்பரப்புகளைப் பாதுகாப்பதில்லை. அவை மெதுவாக நகரும், எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

பாரசீக வளைகுடா, செங்கடல், கிழக்கு மத்தியதரைக் கடல் ஆகிய பகுதிகளிலிருந்து அமெரிக்கக் கடற்படைப் படைப்பிரிவுகள் படிப்படியாகவும் அவமானகரமான முறையிலும் பின்வாங்குவது, பாரம்பரியத் துப்பாக்கிப் படகு இராஜதந்திரத்தின் (gunboat diplomacy) பெரும் தோல்வியை வெளிப்படுத்துகிறது.

இந்தக் கடல்சார் பின்னடைவு மத்திய கிழக்கின் எல்லைகளுக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. அதன் விளைவுகள் ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கட்டமைப்பையும் உடனடியாகச் சீர்குலைக்கின்றன.

வாஷிங்டன், ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது பேட்ரியட் மற்றும் THAAD வான் பாதுகாப்பு ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அவசரமாகப் பின்வாங்கும் நிலைகளுக்கு மாற்றி வருகிறது (ஃபேர்ஃபோர்டைப் பார்க்கவும்). இதனால் அட்லாண்டிக் கூட்டணியின் கிழக்குப் புறப் பாதுகாப்பு வலயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஐரோப்பா தனது முழுமையான மூலோபாயப் பாதிப்புக்குள்ளாகும் நிலையைக் கண்டறிந்து வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புக் குடை என்பது கற்பனையானதும் தற்காலிகமானதுமான ஒரு கட்டமைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அது உணரத் தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க இராணுவச் செல்வாக்கை படிப்படியாக அகற்றுவதோடு, ஐரோப்பியக் கண்டத்தில் அதன் மூலோபாய இருப்பையும் பலவீனப்படுத்துவதன் மூலம் பாஸ்தரான் (Pasdaran) படைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளன.

ஏற்கெனவே, மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா வரை அமெரிக்கப் படையினர் தமது உடைமைகளைக் கட்டிக்கொண்டு வெளியேறுகின்றனர்; ஈரானின் தாக்குதல் அச்சம் காரணமாக இராணுவத் தளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகின்றன.

இப்போது ஆப்பிரிக்காவை நோக்கியும் கவனம் திரும்புகிறது; குறிப்பாக, அமெரிக்க இராணுவத் தளங்களைத் தமது நிலப்பரப்பில் கொண்டுள்ள நாடுகளை நோக்கி.

அமெரிக்க விமானம் ஒன்று ஈரானுக்கு எதிராக ஒரேயொரு தாக்குதலை நடத்துவதற்காகத் தனது நிலப்பரப்பிலிருந்து புறப்பட்டால்கூட, ஜிபூட்டி புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளின் கோபத்துக்கு ஆளாகக்கூடும்.

சவூதி அரேபியாவின் கூட்டாளி என்று கூறிக்கொண்டு, சியோனிச இஸ்ரேலுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தனது நிலையை மறைத்துவரும் எகிப்து, ஈரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையிலும் தலையிட்டால், அது கற்காலத்திற்குத் தள்ளப்படக்கூடும்.

அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள ஏனைய ஆப்பிரிக்க நாடுகளும், வாஷிங்டனுக்கு அடிமைப்பட்டிருக்கும் தமது நிலையையும் கீழ்ப்படிதலையும் இரகசியமாகத் தாங்கிக்கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதேவேளை, தமது நிலப்பரப்பிலிருந்து ஈரானுக்கு எதிராக ஒரேயொரு தாக்குதல்கூட நடத்தப்படுவதற்கு அனுமதிக்காமல் இருப்பதில் அவை மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இதுவே அடிமைநிலைக்கும் கீழ்ப்படிதலுக்கும் கொடுக்க வேண்டிய விலையாகும்.

காகிதப் புலியின் தோற்றம்

இந்தக் கோட்பாட்டுச் சிதைவின் முன்னால், டொனால்ட் ட்ரம்பின் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள், வலிமையற்ற காகிதப் புலியின் நாடகபாணியிலான பாவனைகளைத் தவிர வேறொன்றுமில்லை.

ஊடகங்கள் வாயிலான அவரது இறுதி எச்சரிக்கைகளும் இரண்டாம் நிலை வர்த்தகத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்களும், தகவலறிந்த எந்தவொரு பார்வையாளரையும் இனி ஏமாற்றுவதில்லை.

வெள்ளை மாளிகையிலிருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு அவசர முடிவும், தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமான மேலாதிக்க வீழ்ச்சியின் தொடக்கத்தைச் செயற்கையாகத் தாமதப்படுத்துவதையே ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளது.

சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய CRIC அணியைக் கட்டுப்படுத்துவதற்காக யூரேசியாவைப் பிளவுபடுத்தும் அமெரிக்க முயற்சிகள், கடக்க முடியாத தடையொன்றில் மோதுகின்றன.

இந்த உறுதியான பல்முனைக் கூட்டணி, மேற்குலகின் ஒருதலைப்பட்ச ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற பொதுவான கட்டாயத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

திகைத்துப்போயுள்ள தனது கூட்டாளிகளுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக வாஷிங்டன் தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் கண்கவர் நடவடிக்கைகளைப் பலமடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த அவநம்பிக்கையான பாவனைகள் அதன் உண்மையான பலவீனத்தை மேலும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க வல்லமை இனி அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. புதிய உலகளாவிய புவிசார் அரசியல் ஒழுங்கின் உறுதியான செயற்பாட்டாளர்களை அதன் அச்சுறுத்தல்கள் இனி தடுத்து நிறுத்துவதுமில்லை.

CRIC அணியின் ஒருங்கிணைப்பும் புதிய உலக ஒழுங்கும்

மத்திய கிழக்கில் மேற்குலகம் சந்தித்துள்ள பெரும் தோல்வி, உலக அரசியலின் ஈர்ப்பு மையம் யூரேசியாவை நோக்கி நிரந்தரமாக நகர்வதை விரைவுபடுத்துகிறது.

தெஹ்ரானுடன் கையெழுத்திடப்பட்ட நீண்டகாலத் தொழில்துறை மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மைகள் வாயிலாகச் சீனா தனது மூலோபாய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாத்து வருகிறது.

உயர் துல்லியமான விண்வெளிப் புலனாய்வுத் தகவல்களையும் மின்னணுப் போர் திறன்களையும் வழங்குவதன் மூலம் ரஷ்யா யூரேசியப் பிராந்தியத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் உறுதிப்படுத்தி வருகிறது.

துணிச்சலான மூலோபாய நோக்கத்துடன், வட கொரியா இந்த அணியின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

CRIC குழுவின் அரசியல், பொருளாதார, இராணுவ ஒருங்கிணைப்பு என்பது முறியடிக்க முடியாத புவிசார் அரசியல் யதார்த்தமாக உருவெடுத்து வருகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் பயன்பாட்டைக் குறைக்கும் செயல்முறை விரைவுபெற்று வருவதால், மேற்கத்திய நிதித் தடைகள் தமது கட்டாயப்படுத்தும் ஆற்றலை இழந்துவிட்டன.

இந்தப் பெரிய வரலாற்று மாற்றத்திற்கான மையத் தூண்டுகோலாக மத்திய கிழக்கு விளங்குகிறது. இதன் மூலம் உலகளாவிய மேலாதிக்கத்தை நிறுவும் அமெரிக்கத் திட்டத்தின் இறுதித் தோல்வி உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து இலத்தீன் அமெரிக்கா வரையிலும், ஆசியாவிலிருந்து கரீபியன் பிராந்தியம் வரையிலும், மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்து வருகின்றனர். அவர்கள் படிப்படியாக மேற்குலகிலிருந்து விலகி, கிழக்கத்திய வல்லரசுகளுடன் கைகோத்து, உலக அரங்கில் இயக்கமிக்க சக்தியாக விளங்கும் மிக வலிமையான உலகளாவிய தெற்கு அணியைக் கட்டியெழுப்புகின்றனர்.

எனவே, 2026ஆம் ஆண்டு புவிசார் அரசியலில் முழுமையான முறிவு ஏற்பட்ட திருப்புமுனையாக வரலாற்றில் பொறிக்கப்படும் என்பது தெளிவாகிறது. வாஷிங்டனின் கோட்பாட்டு ஆணவம், கள யதார்த்தங்களுடனும் புதிய நவகாலனித்துவ ஒழுங்கைத் தகர்க்கத் தீர்மானித்த மக்களின் உறுதியுடனும் மோதிய தருணம் இதுவாகும்.

தனது விருப்பத்திற்கு ஏற்ப உலகை வடிவமைக்க முடியும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால், அது அவசரமானதும் கௌரவமற்றதுமான பின்வாங்கலில் சிக்கிக்கொண்டுள்ளது.

தீண்ட முடியாத கோட்டையாக இஸ்ரேல் கொண்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தஸ்து இப்போது இழக்கப்படுகிறது. அமெரிக்காவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் பயனற்ற தன்மையைச் சவூதி அரேபியா உணரத் தொடங்கியுள்ளது.

மேற்குலகின் மூலோபாய வீழ்ச்சி இனி வெறும் அனுமானம் அல்ல. பல்முனை உலக ஒழுங்கின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், அது மறுக்க முடியாததும் மீளமுடியாததுமான ஓர் உண்மை நிலையாக மாறியுள்ளது.

மொஹமட் லமீன் கபா

ஆளுகையின் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புத் துறையில் நிபுணர், ஆளுகை, மனித மற்றும் சமூக அறிவியல்களுக்கான நிறுவனம், பான்-ஆப்பிரிக்கப் பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment