கலாநிதி கலீம் சித்தீகி
இயக்குநர், முஸ்லிம் நிறுவனம் – இலண்டன்
ஹரமைனின் எதிர்காலம்???
ஹரமைனின் எதிர்காலம் குறித்த உலகக் கருத்தரங்கில் ஆற்றிய தொடக்க உரை
(முதல் பக்கம்)

எனவே, இறைதூதர் (ஸல்) அவர்கள் ஹரமைனுக்காக உருவாக்கிய அரசியல் ஒழுங்கமைப்பு என்ன? என்பது தான் இக்கருத்தரங்கு எழுப்பவேண்டிய முதற் கேள்வியாகும்
எங்குமுள்ள எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய முடிவுகளை எடுக்க வேண்டுமாயின் ஹரமைனின் எதிர்காலம் எனும் விடயம் தொடர்பாக இந்த அணுகுமுறையைக் கைக்கொள்வது அத்தியாவசியமாகின்றது
தற்கால அரசியல் நிலைமையை, முஸ்லிம் நிறுவனம், விசேடமானதோர் கோணத்தில் நோக்குகின்றது. எமது நோக்கில், காலனித்துவ யுகத்தில் உருவான சமுதாயத் தேசியங்கள் அனைத்தும் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு முரண்பாடானவை. இந்த நாடுகளும் அவற்றின் அரசுகளும், அவை வமிச முறை அரசாக, சர்வாதிகார அரசாக அல்லது ஜனநாயக அரசாக, எந்த வகையாயிருந்தாலும், இஸ்லாத்தின் அரசியல் இலட்சியங்களுக்கு முரண்பாடானவையாக இருப்பது மட்டுமன்றி, இஸ்லாத்துக்கு எதிரானவையாகவும் இருக்கின்றன. அதற்கும் மேலாக, இந்த நாடுகளும் அவற்றின் அரசுகளும் பெரும்பாலும் இஸ்லாத்தின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதோடு, அவர்களினால் பாதுகாக்கப்பட்டும் ஆதரிக்கப்பட்டும் வருகின்றன. இதுவே எம்முடைய கருத்தாகையால், இஸ்லாமிய இயக்கத்தின் எந்தவோர் அங்கமும் இந்தப் பிரதேச ‘சுயாதிபத்திய’ நாடுகளின் வரையறைக்குள் செயற்பட முடியாதென்பதே எமது துணிபு. எம்முடைய நோக்கில், குஃப்ர் (இறைமறுப்பு) உடனான எல்லையைத் தவிர்த்து, இந்த நாடுகளுக்கும் அவற்றின் எல்லைகளுக்கும் இஸ்லாத்தில் இடமேயில்லை. இஸ்லாமிய இயக்கம் என்பது ஓர் உலகளாவிய கட்சியுமல்ல; அதன் குறிக்கோள்களை அடைந்துகொள்ளும் வழிமுறையாக, தேசிய அல்லது அதுபோன்ற உபதரத்திலான மற்றும் அமைப்புகளை அது அனுமதிப்பதும் இல்லை. உம்மத்தின் இன்றைய நிலவரத்துக்கு முகங்கொடுப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது இஸ்லாமியப் புரட்சி வழியாகும்.
இப்போது எமக்குத் தேவைப்படுவது என்னவெனில், உலகின் எல்லாப் பாகங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக செயல்படத்தக்க இஸ்லாமியப் புரட்சிகளுக்கான கூட்டுமொத்தமான திட்டமொன்றாகும். இஸ்லாமியப் புரட்சியானது சடுதியானதோ அல்லது உலகம் முழுக்க ஏக காலத்தில் இடம்பெறக்கூடியதோ அல்ல என்பது உண்மைதான். உம்மத்தின் சில பாகங்கள், ஏனைய பாகங்களிலும் முன்பதாகவே இஸ்லாமியப் புரட்சி படிநிலையை அடையக்கூடும். குறிப்பான பிரதேசங்களில் ஆற்றல்களையும் வளங்களையும் ஒன்றுதிரட்டுவதற்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் முறைமை ஒன்றை இஸ்லாமிய இயக்கம் விருத்தி செய்துகொள்வது விரும்பத்தக்கது. இஸ்லாமிய இயக்கத்தின், இஸ்லாமியப் புரட்சியை நோக்கிய வளர்ச்சிப் படிகளை நாம் வரையறுப்பதும் விரும்பத்தக்கதே. இந்த அடிப்படையிலேயே, ஹரமைனின் எதிர்காலம் பற்றிய விடயத்தையும் நோக்கவேண்டும். அமெரிக்காவின் ஒரு கைக்கூலியான இஸ்ரவேலினால் தற்போது அல்-குத்ஸ் (பைத்துல் முகத்தஸ்) ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கும், அமெரிக்காவின் இன்னுமொரு கைக்கூலியான சவூதி அரசு மக்காவையும் மதீனாவையும் தன்னாட்சிக்குட்படுத்தியிருப்பதற்கும் இடையே வேறுபாடேதும் உண்டா? இல்லையா? என்பது நாம் கருத்தில் எடுக்கவேண்டிய பிரச்சினைக்குரிய விடயமொன்றாகும்.
‘அல் குத்ஸுக்கு தாராளமாகப் போகலாம்’ என முஸ்லிம்களுக்கு இஸ்ரவேல் வழங்கும் சலுகையைப் போன்ற புரட்டுகளே சவூதியர்களின் இஸ்லாமியப் பாசாங்குகள் எனக் கூறலாம். இன்றைய உலக அரசியலில் சவூதி ஆற்றும் பங்கு, இஸ்ரவேல் ஆற்றும் பங்கிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதா? என்ற அதிமுக்கிய கேள்வியை நாம் எமக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்பிராந்தியத்தில் இஸ்ரவேல் ஆற்றும் பங்கை நிறைவுசெய்வதே சவூதியின் பங்காற்றல்; இஸ்லாத்தின் கேந்திரப் பிரதேசம் தொடர்பான அமெரிக்கக் கொள்கைக்கு சவூதியர்கள் இஸ்லாமிய முலாம் பூசுகின்றனர். இச்சூழ்நிலையில், இஸ்லாமிய இயக்கத்தின் உலகளாவிய நோக்கில், ஹிஜாஸினதும் ஹரமைனினதும் அந்தஸ்து என்ன; இவ்விடயத்துக்குக் கொடுக்கப்படவேண்டிய முன்னுரிமை என்ன என்பன பற்றி இக்கருத்தரங்கு தீர்மானிக்க வேண்டும். இவற்றையும் மற்றும் விடயங்களையும் பரிசீலனை செய்வதற்கு முன், இஸ்லாமியப் புரட்சி பற்றி நாம் விளங்கிக் கொண்டுள்ளவற்றையும் கூறிவைக்க விரும்புகிறோம். இதனை நாம், ஈரான் இஸ்லாமியப் புரட்சியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
ஈரான் இஸ்லாமியப் புரட்சி அரசியல் சக்தியின்றி உயிரற்ற சடமாயிருந்த இஸ்லாத்துக்கு, அரசியல் சக்தி மீண்டும் கிடைக்கப் பெற்றதை இஸ்லாமியப் புரட்சி குறித்துநிற்பதே, எம்மைப் பொறுத்தளவில் ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் முக்கியமான அம்சமாகும். இஸ்லாத்தின் குறிக்கோள்கள் யாவும் அகில உலகளாவியனவாகும். இஸ்லாத்தில் வாழுமாறு, அதாவது மனப்பூர்வமாக அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து வாழுமாறு முழு மனித இனத்தையும் தூண்டுவதே இஸ்லாத்தின் இறுதிக் குறிக்கோள். எனினும், ஈரானிலும்கூட, எல்லோருமே, வரலாற்றின் உலகளாவிய அடிப்படையில் இஸ்லாமியப் புரட்சியை விளங்கிக்கொண்டவர்களல்லர். இஸ்லாமியப் புரட்சியானது ஷீஆ சிந்தனையின் சிறப்பான வோர் பெறுபேறே எனக் கருதும் பான்மையுடையோரும் ஈரானில் உளர். அதேவேளை, ஏனைய இயக்கங்களின் செல்வாக்கும் மறுக்கப்படுவதில்லை. ஈரானின் ஜனாதிபதியாக விளங்கும் அலி காமெளெயி, ஹாதி குஸ்ரோஷாஹி போன்ற உலமாக்கள், ஹசனுல் பன்னா, செய்யித் குதுப் ஆகியோரின் எழுத்தாக்கங்களை புரட்சிக்கு முன்னரே ஃபார்சி மொழிக்கு பெயர்த்துள்ளனர்
ஈரான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளிலுள்ள ஷீஆ முஸ்லிம்களின் பெரும் அரசியல் உயிரோட்டம், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் உலகளாவிய இஸ்லாமியப் போக்குகளுடன் தொடர்புற்றிருந்தது
இஸ்லாத்தின் அரசியற் சக்தியின் புத்துயிர்ப்பு ஆரம்பிக்க வேண்டுமெனின், இஸ்லாத்திற் குள்ளேயே இத்தகைய சிந்தனை நெருக்கம் தேவையானதும், அத்தியாவசியமானதும் ஆகும்
எனினும், இதே போன்றே, இமாம் கொமெய்னி அவர்களை உம்மத்தின் தலைவராகக் கருதும் பெரும் எண்ணிக்கையான சுன்னி உலமாக்களும் உளர்
அரசியலைப் பொறுத்தவரை, சுன்னி வழிமுறை யானது நெடுங்காலமாக இஜ்திஹாதைப் பின்பற்றாது ‘சமயோசித சிந்தனாவாத’த்தைக் கைக்கொண்டு வந்துள்ளது
ஆனால் மறுபுறத்தில், ஈரானிய உலமாக் களோவெனில், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், உம்மத்தின் தலைமைத்துவத்திற்கு வேண்டிய அத்தனை பண்புகளையும் கொண்ட தலைமைத்துவத்தைத் தோற்றுவித்துள்ளனர். மேற்கத்திய செல்வாக்குக்கு அப்பாற்பட்டிருந்த உம்மத்தின் ஒரேயொரு பகுதியிலிருந்தே இந்த தலைமைத்துவம் தோற்றம் பெற்றது. ஷீஆ உலமாக்கள் வரலாற்று ஆதர்ஷம் போன்றவர்கள். உள்ளூரில் வளர்க்கப்பட்ட முனாஃபிகீன் (நயவஞ்சகர்)களினதும், அவர்களுடைய ஆதரவாளர்களான வல்லரசுகளினதும் அகம்பாவம் தாருல் இஸ்லாத்தின் (இஸ்லாமிய பூமியின்) முக்கிய பகுதியொன்றில் உச்சகட்டத்திலிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் வெளிப்பட்டு குஃப்ர் சக்தியை முறியடித்தார்கள். ஆட்சியாளர்களின் ஒழுங்கற்ற போக்கில் ஈரானிய உலமாக்கள் எவ்வித பங்கும் கொண்டிருக்கவில்லை. முடியாட்சியின் ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கவும் இல்லை. உஸூலி சிந்தனாவாதத்தின் வெற்றியானது, இமாம் மஹ்தி (அலை) வெளிப்படாதிருக்கும் நிலையிலும், சுன்னி முஸ்லிம்களுடன் உறவுகள் அற்றிருந்த நிலையிலும், விசேடமாக, நாடு, நிலை, வழிகெடுக்கும் கட்டுப்பாடுகளிலிருந்தும் ஷீஆ உலமாக்களை விடுவித்துள்ளது. இவ்இயக்கப்பாடான உலகநோக்கொன்றை அவர்களுக்கு வழங்கியுள்ளது. உம்மத்தினுடைய அரசியல் செல்வாக்கின் வீழ்ச்சியில் அவர்களுக்கு எவ்வித பொறுப்புமில்லை. உலகின் நிலையைக் கண்டு அவர்கள் சினங்கொண்டார்கள். உலக விவகாரங்களை முன்னர் அவர்கள் மற்றவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டிருந்தார்கள். பின்னவர்களோ அதனைக் குழப்பிவிட்டிருந்தார்கள். 1978-79ம் காலப்பகுதியில் உம்மத்தின் உணர்வைத் தட்டியெழுப்பிய ஷீஆ உலமாக்கள் கடுஞ்சினங்கொண்டிருந்தார்கள். நெடுங்காலத்தின்பின் வீடு திரும்பிவரும்போது, அயலவர்கள் தன்வீட்டில் குடியிருப்பதையும், தன் குடும்பத்திலுள்ள பெண்களில் ஒழுக்கச் சீர்கேட்டையும் காணும் ஒரு முதிய தந்தையின் நிலையிலேயே அவர்கள் இருந்தனர்.
இமாமின் வரவை எதிர்பார்த்திருந்த நிலையில் பல்கிப் பெருகிய அம்மக்கள் கூட்டம், அவர்களை எவ்வாறு வரவேற்றது! அவர்கள் எதிர்பார்த்திருக்கும் இமாம் வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சாதாரண இமாம், பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் வந்தார்.
எந்த இமாமும் இல்லாதிருப்பதைவிட ஒரு சாதாரண இமாமைக் கொண்டிருப்பது அவர்களுக்கு நல்லதாயிருந்தது. இந்தத் தலைமை, கண்முன்னே, ஸ்தூலமாகத் தோன்றிநிற்பது மேலும் கவர்ச்சிகரமாயிருந்தது. காலனித்துவ சக்திகளினால் வளர்க்கப்பட்டு, காலனித்துவ யுகத்துக்குப் பிந்திய நாடுகளின்மீது திணிக்கப்பட்ட தலைவர்களின் காலம் மலையேறிவிட்டது. ஆங்கில, பிரெஞ்சு, ருஷ்ய, ஜெர்மன், இத்தாலி அல்லது டச்சு மொழிகளில் பேச இந்த உலமாக்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு பேசத் தெரிந்ததெல்லாம் ஃபார்சியும் அரபும்தான். அவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுத் தேர்ந்திருந்தார்கள். ஐரோப்பிய ‘மறுமலர்ச்சி’, ‘அறிவூட்டல்’, ‘பகுத்தறிவு யுகம்’ என்பவற்றினால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவர்கள் பெற்றிருந்த அறிவு இஸ்லாமிய அறிவு மட்டுமே. அவர்கள், மனித முயற்சியின் பெறுபேறுகளை அல்லாஹ்வின் கருணையின் பெயரில் சாட்டிவிடும் அப்பழுக்கற்ற இறைவிசுவாசத்தைக் கொண்டிருந்தனர். ‘நிராகரிப்போருடன் கண்டிப்பாயிருங்கள்’ என குர்ஆன் (48:29) கூறியபோது அவர்கள் குர்ஆனில் நம்பிக்கை கொண்டு, குஃப்ரினதும் அதன் ஆதரவாளர்களினதும் தொழில்நுட்பத் திறமையையும் வலிமையையும் கண்டு பயப்படாதிருந்தனர். உலகை அல்குர்ஆன் ‘ஹிஸ்புஷ் ஷைதான்’ (ஷைத்தானின் கூட்டத்தினர்), ‘ஹிஸ்புல்லாஹ்’ (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) என வகுக்கின்றது. ஈரானிய உலமாக்கள் இதே அடிப்படையில் உலகை அணுகத் தயங்கவில்லை. அவர்கள், ‘அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் சித்தியடைந்தோர்... (58:22) என்ற குர்ஆனின் உறுதிமொழியில் பூரண நம்பிக்கை வைத்துள்ளனர். அதுபோல் அவர்கள் சித்தியடைந்தனர்.
தெளிவாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில், திருமறையினாலும், திருநபியவர்களின் ‘சுன்னா’வி(வழிமுறை)னாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தலைமைத்துவ தகைமைகளின் அடிப்படையில், உம்மத்தின் அல்லது அதனொரு அங்கத்தின் தலைமைத்துவமானது, இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திக்கோ அல்லது பண்பாட்டிற்கோ அரசியல், கலாசாரம் அல்லது பொருளாதாரம் போன்ற எவ்வகையிலும் அடிமைப்பணி புரியும் எவராலும் அல்லது எக்குழுவினராலும் உரிமை பாராட்ட முடியாது; அவர்களுக்குக் கொடுக்கப்பட முடியாது. இவ்வடிப்படையானது, காலனித்துவ சக்திகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தை அல்லது தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொண்ட அத்தனை ஆட்சியாளர்களையும் உடனடியாகத்தகுதியற் றவர்களாக்குகின்றது
காலனித்துவ சக்திகளினால் தோற்றுவிக்கப்பட்ட உயர்மட்டத்தினர் இஸ்லாத்தின் தலைவர்களாயிருக்க முடியாது
ஈரானுக்கு வெளியே இஸ்லாமியப் புரட்சி
ஒருவகையில், ஈரான் இஸ்லாமியப் புரட்சி உம்மத்தின் மற்றைய பகுதிகளில் அதன் உகந்த தன்மையையும், மீட்டல் தன்மையையும் எடுத்துக் காட்டக்கூடிய காலம் வரும்வரை அப்புரட்சி பூரணமற்றதாகும்
ஈரான் இஸ்லாமியப் புரட்சி தொடர்பாக ‘இஸ்லாமிய நிறுவனம்’ கடைப்பிடித்து வரும் அணுகுமுறை இதுவே
புரட்சியின் இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து அதன் ஈரான், ஷீஆ ஆகிய அம்சங்களை அப்புறப்படுத்துவது, ஈரானிலுள்ள உம்மத்துக்கும் முக்கியமானதாகும்
இஸ்லாத்தில், ஏற்கெனவே அகில உலக ஐக்கியம் நிலவுகிறது
(வரைபடம்):

குர்ஆன், ஹதீஸ், சிந்தனைப் போக்குகள், வரலாறு, பண்பாடு, கலாசாரம் (உம்மத்) $\rightarrow$ (உலகளாவிய) இஸ்லாமிய இயக்கம் $\rightarrow$ (ஈரான்) இஸ்லாமியப் புரட்சி $\rightarrow$ (ஈரான்) இஸ்லாமிய அரசு
(மேலும் 'இஸ்லாமிய அரசு' என்பதிலிருந்து 'இஸ்லாமியப் புரட்சி', 'இஸ்லாமிய இயக்கம்' மற்றும் 'உம்மத்' ஆகியவற்றிற்கு மீளத் தொடர்புபடுத்தும் அம்புக்குறிகள் காட்டப்பட்டுள்ளன) .
இஸ்லாத்தின் கூட்டுவளம் குர்ஆன், ஹதீஸ், இறைதூதரின் சீரா (வாழ்வு), சுன்னா (வழிமுறை), இஸ்லாத்திலுள்ள பல்வேறு சிந்தனைப் போக்குகள், பண்பாடு, வரலாறு, கலாசாரம், உம்மத்தின் பூகோள, மனிதப் பரம்பல் வியாபகம் என்பவற்றால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது
இஸ்லாமியப் புரட்சிக்கான மார்க்கத்தை நான்கு படிமுறைகளாக வகுக்கலாம்:
நடைமுறை முறைமையை நிராகரித்து, முஸ்லிம் மக்களை ‘ஜிஹாது’க்காக அழைக்கும் ‘முத்தகீ’ தலைமைத்துவத்தின் தோற்றம்
. ‘முத்தகீ’ தலைமையின் கீழ் முஸ்லிம் மக்கள் ‘ஹிஸ்புல்லாஹ்’க்களாக ஒன்றுதிரள்வதும்; காலனித்துவ, காலனித்துவத்துக்குப் பிந்திய முறைமைகளுக்கெதிராக அவர்கள் ‘ஜிஹாத்’ மேற்கொள்ளலும்
. இஸ்லாத்தின் உள், வெளி எதிரிகளை வெற்றிகொள்ளலும்; சமுதாயத் தேசியத்தை நிர்மூலமாக்கி, இஸ்லாமிய அரசை நிறுவுதலும்
. இஸ்லாத்தின் வெளி எதிரிகளினால் திணிக்கப்படும் யுத்தங்களை எதிர்கொள்ளல்
.
ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்து கடந்த ஒன்பது வருடங்களாக உலகம் முழுவதிலும் பரவலான ஆலோசனைகளை ‘இஸ்லாமிய நிறுவனம்’ மேற்கொண்டுவந்துள்ளது
உண்மை நிலை இதுவாகையால், இஸ்லாமியப் புரட்சியின் நான்கு படிமுறைகளும் உம்மத்தின் எப்பகுதியிலும் மீட்கப்படக்கூடியவை என்பது தெளிவு. எனினும், உம்மத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் நிலவரம் பெரிதும் மாறுபடுகின்றது. கேந்திர முக்கியத்துவமிக்க பிரதேசங்களில் தொடர்ச்சியான இஸ்லாமியப் புரட்சிக்கானவொரு திட்டத்தை கவனமாகத் தயாரிக்க வேண்டும். அவ்வப் பிரதேசங்களிலுள்ள உலமாக்களே அவ்விடங்களுக்குத் தேவையான திட்டத்தைத் தயாரிக்கவேண்டும். ஒவ்வோர் இடத்திலுமுள்ள ஹிஸ்புல்லாஹ்கள் உலகின் ஏனைய எல்லாப் பாகங்களிலுமுள்ள ஹிஸ்புல்லாஹ்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, கருத்துப் பரிமாற்றங்களை விருத்திசெய்து கொள்ளல் வேண்டும். சில வகையான வளங்கள் உலகின் சில பகுதிகளில் திரட்டப்பட்டு, வேறு பகுதிகளில் பிரயோகிக்கப்படுவது சாத்தியமானதும் விரும்பத்தக்கதுமாகும்.
ஹிஸ்புல்லாஹ், இஸ்லாமிய அரசாகப் பரிணமித்த ஒரு பிரதேசம் ஈரான். எனவே, ஈரான் ஒரு ஹிஸ்புல்லாஹ் நாடாகும். அதனைத் தொட்டு, ஏனைய எல்லா விடயங்களிலுமுள்ள ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய இயக்கம் ஈரான் ஹிஸ்புல்லாஹ் நாட்டின் தொடர்ச்சியாகும். இன்றும்கூட ஈரானை உலகளாவிய யதார்த்தமாகவும்; உலக சக்தியாகவும் ஆக்கியுள்ள பிரதான உண்மை இதுவேயாகும். ஒரு பிரதேச நாடென்ற ரீதியில் ஈரான், பௌதீக எல்லைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிஸ்புல்லாஹ் நாடென்ற வகையில் அதற்கு எல்லைகளே கிடையாது.
ஒவ்வொரு புதிய இஸ்லாமிய அரசும், முதல் இஸ்லாமியப் புரட்சியின் தொடர்ச்சியாகும். ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் ஒவ்வோர் அங்கமும் தனித்தனி தலைவரைக் கொண்டிருக்கும். உலகின் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள இந்த அனைத்து தலைமைகளும், ஈரான் இஸ்லாமிய அரசின் தலைமைத்துவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ்வின் அகில உலகத் தலைமைத்துவம் இமாம் கெமெய்னிக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்குமே உரியது என்பதனை, உள்ளூர், பிராந்திய ஹிஸ்புல்லாஹ் தலைவர்கள் அங்கீகரிக்க வேண்டும்
உலக அரசியலில் இஸ்லாமியப் புரட்சியின் தாக்கம்
ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் இந்த உலகளாவிய தாக்கம், இஸ்லாத்தின் எதிரிகளினால் நன்கு உணரப்பட்டுள்ளது
அகம்பாவ அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்வதில் ஹிஸ்புல்லாஹ் அரசின் மேன்மையை ‘ஈரான் கேட்’ விவகாரம் எடுத்துக் காட்டுகின்றது
உண்மையில் என்ன நடைபெற்றிருக்கின்றதெனில், இஸ்லாத்தின் அரசியல் சக்தி, உலக அரசியலில் அதன் பங்கை வகிக்க மீண்டும் வந்துள்ளது என்பதே
ஹஜ்ஜின் குறிக்கோள், ஹரமைனில் ஹஜ்ஜாஜிகளின் நடத்தை என்பன பற்றி தற்போது நிலவும் அபிப்பிராயபேதம், உண்மையில், இஸ்லாத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் இடையிலான தகராறு ஆகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களைப் பற்றியும் மேற்குலகு குறிப்பிட்டவொரு கருத்தைக் கொண்டுள்ளது
மேற்கத்திய நாகரிகத்துடனான மோதல்
ஹரமைனின் எதிர்காலம் பற்றிய சச்சரவின் மூலம், உண்மையில் நாம் கூட்டுமொத்தமாக மேற்கத்திய நாகரிகத்துடனான மோதலொன்றிலேயே ஈடுபட்டுள்ளோம்
எம்முடைய அனைத்து இன்னல்களுக்குமான தீர்வு, இஸ்லாத்தின் அரசியல் சக்தியை செயற்படுத்துவதிலேயே தங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கிக்கொள்ளப்படவேண்டும்
மனிதனைப் பற்றிய மேற்கத்திய நோக்கில், மனிதன் மிருகத்துக்குச் சமமானவனே; கூர்ப்பின் எதேச்சையான விளைவொன்றே. இந்த நோக்கு, மனிதனின் ‘அறிவியல் ரீதியான’ பூர்வீக இயல்பை பிரதிநிதித்துவம் செய்வதாக மேற்குலகு கூறுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில், இஸ்லாம் மாத்திரமே மனிதனின் பூர்வீக இயல்பை பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆனால் மேற்குலகு, இஸ்லாத்தின் இக்கூற்றை அறிவுக்கொவ்வாத மதக் கோட்பாடு, மூடநம்பிக்கை என்று கூறுகின்றது. எம்மைப் பொறுத்தவரை, இஸ்லாத்தின் அடிப்படையில், இவ்வுலகும், முழு அகிலமும், அவற்றிலுள்ள அனைத்தும் கச்சிதமாகப் படைக்கப்பட்ட சம்பூரணமான அமைப்பாகும். மனித பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, ஒழுக்கப் பெறுமானங்களுக்கான மூலம் ஒன்றில்லை என்பது மேற்கின் வாதம். ஒழுக்கப் பெறுமானங்கள், நன்மை, தீமை யாவற்றுக்கும் மூலம் அல்லாஹ் ஒருவனே என உறுதியோடு இயம்புகின்றது இஸ்லாம். நன்மை, தீமை என்பன, அறிவுரீதியான விசாரணை, பகுத்தறிவு, தன்னலம் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்ற மனிதனின் குணம், விருப்பு வெறுப்பு, தேவைகள் என்பவற்றுக்கிசைய சதா மாறிக்கொண்டிருக்கும் சார்பு பதங்களே என்பது மேற்கத்திய சிந்தனையாகும். சுருங்கக்கூறின், மேற்குலகு, காட்டுமிராண்டிச் சட்டத்திலேயே நம்பிக்கை கொண்டுள்ளது, எனவே, சவூதியர்கள் அராபிய பாலைவனத்து விலங்குகளைப் போன்று நடப்பதில் புதுமையொன்றுமில்லை. சவூதியர்களின் ஒழுக்க மாண்பு, ஐரோப்பிய-அமெரிக்க சூதாட்ட நிலையங்களிலும், விபசார விடுதிகளிலும் தொடர்ச்சியாக பகிரங்கமாகின்றது. எனவேதான், மக்கா, மதீனா நகரங்கள் இன்று ஹூஸ்டன், டல்லாஸ் ஆகிய அமெரிக்க களியாட்ட நகரங்களின் தோற்றத்தைப் பெற்றிருக்கின்றன. இவ்விரு புனித நகரங்களின் இஸ்லாமியப் பண்பை மறைத்து, இறுதியில் அப்பண்புகளைத் துடைத்தெறிவதை இலக்காகக் கொண்டதே ஹிஜாஸில் உருவாகியிருக்கும் கொன்க்ரீட் வனம். மக்காவிலும், மதீனாவிலும் இன்று சவூதியர்கள் செய்துகொண்டிருப்பவற்றிற்கும், ஜெருசலத்தில் இஸ்ரவேலியர் புரியும் செயல்களுக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் இல்லை.
எனவே, ஹரமைன் சவூதியின் கட்டுப்பாட்டிலிருப்பது உம்மத்தினால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். சவூதியர்கள் எப்பொழுதுமே மேற்கத்திய சக்திகளின் அரசியல் நலன்களுக்கே சேவகம் புரிந்து வந்துள்ளனர் என்பதே அதற்கான அடிப்படைக் காரணமாகும். குஃப்ருக்கு சேவகம் புரிந்ததிலிருந்தே சவூதி அரச குடும்பத்தின் பூர்வீகம் ஆரம்பிக்கின்றது. சவூதியர்கள் இன்று, அரசியல் செயற்பாடு எதுவுமற்ற வெறும் சடங்காக இஸ்லாத்தைத் தாழ்த்துவதற்கான உலகளாவிய பிரசாரமொன்றில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் மக்காவில் ஹாஜிகளைப் படுகொலை புரிந்ததோடு, உம்மத்தின் இதயமான ஹரமைனை உலகளாவிய குஃப்ருக்கு, விசேடமாக அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்துவதற்கான பயங்கர நடவடிக்கையை சவூதியர் மேற்கொண்டனர். ஈரான் இஸ்லாமியக் குடியரசின்மீது தாக்குதல் தொடுக்கும் நோக்குடன் அமெரிக்கா தனது கடற்படையை பாரசீக வளைகுடாவில் திரட்டிய சமயத்தோடு இணைந்ததாக, ஹஜ்ஜாஜிகளின் படுகொலையும் இடம்பெற்றது ஓர் எதேச்சையான நிகழ்வொன்றல்ல. உம்மத்தின் கவனத்தை பாரசீக வளைகுடாவிலிருந்து திசை திருப்புவதும், ஈரானை மக்காவின் ஆக்கிரமிப்பாளனாக நாமம் சூட்டுவதுமே அவர்களுடைய நாட்டமாயிருந்தது. சவூதியர்கள், ஹஜ்ஜாஜிகளைச் சுட்டுக்கொன்றும், அதனைத் தொடர்ந்து இஸ்லாமியப் புரட்சியினதும் இஸ்லாமிய அரசினதும் தலைமைத்துவத்துக்கெதிராக உலகளாவிய பிரசார இயக்கமொன்றைத் தொடுத்தும் அமெரிக்கரைத் திருப்திபடுத்தினர். எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம் உம்மத்தை பிளவுபடுத்துவதும், பிரிவினைத் தீயை மூட்டிவிடுவதுமே சவூதி பிரசார இயக்கத்தின் திட்டமாகும். இஸ்லாம் ஒரு பிரிவினைவாதச் சக்தி; இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஐக்கியம் வெறும் கானல் நீர் போன்றது; சமுதாயத் தேசிய அமைப்பே நடைமுறைச் சாத்தியமானது; மதசார்பற்ற தேசிய அரசியல் முறைமைக்கு இசைவாக இஸ்லாம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்; இஸ்லாத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை; மேற்குலகை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் மூலமே முன்னேற முடியும் என்று உம்மத்துக்கு எடுத்துக் காட்டுவதே அவர்களுடைய விருப்பம். சுருங்கக் கூறின், மனிதனைப் பற்றிய மேற்கத்திய கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; குர்ஆனினதும் இறைதூதரின் வழிமுறையினதும் அணுகுமுறையை விட மேற்குலகின் அறிவுரீதியான, பகுத்தறிவு ரீதியான அணுகுமுறைதான் மேலானது என ஏற்றுக்கொள்ளுங்கள் என்று எமக்குப் போதிக்கின்றனர் சவூதியர்.
வரலாற்றில் பலமுறை இடம்பெற்றுள்ளது போன்று, சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையேயான கூட்டுமொத்தமான மோதல்களை உருவகிக்கக்கூடியதாக தனித்தவொரு பிரச்சினையோ அல்லது ஒரு மோதலோ இடம்பெறக்கூடும். உலகளாவிய குஃப்ர் கும்பல், உலகின் நான்கு இடங்களில் செயற்படும் யுத்தமுனைகளில் பிரதிநிதித் துவப்படுத்தப்படுகின்றது. அவை, பாத்திச ஈராக்கினால் திணிக்கப்பட்ட யுத்தம், ஆஃப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, பாரசீக வளைகுடாவில் மேற்கத்திய கடற்படையின் பிரசன்னம், ஹரமைனை சவூதி கைப்பற்றியிருத்தல் என்பனவே. இதே மோதலின் மற்றோர் அரங்கம்தான் ஃபலஸ்தீனையும் பைத்துல் முகத்தஸையும் ஸியோனிசவாதிகள் கைப்பற்றியிருப்பதாகும். உலகளாவிய இரு நாகரிகங்களான இஸ்லாமும் குஃப்ரும், தற்போது பெரும் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன. உலகளாவிய குஃப்ரை மேற்கத்திய நாகரிகம் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இஸ்லாமிய உலகிலுள்ள சமுதாயத் தேசியங்கள் அனைத்தும், விசேடமாக சவூதி அரேபிய முடியரசு, மேற்கத்திய நாகரிகத்தின் இணைபிரியா அங்கங்களாகும். வரலாற்று முக்கியத்துவமிக்க இந்தத் தீர்க்கமான போராட்டத்தில் நாம் வெற்றி ஈட்ட வேண்டுமாயின், ஹிஸ்புல்லாஹ் இயக்கம், இஸ்லாத்தின் சக்தியை உலகளாவிய மட்டத்தில் ஒன்றுதிரட்ட வேண்டியேற்படும்.
செய்வதென்ன? இந்தக் கருத்தரங்கிலே, அதிமுக்கியத்துவமிக்க விடயமாகிய ஹரமைனின் எதிர்காலம் பற்றிய எமது நிலைப்பாட்டை நாம், பகிரங்கமாக எவ்வித ஐயமுமின்றி பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கும் மேலாக நாம் செய்யவேண்டியதொன்றும் உள்ளது. சுருக்கமாக, முஸ்லிம் உம்மத் இன்று எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ‘முஸ்லிம் நிறுவனம்’ கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டை அங்கீகரிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். உலகளாவிய ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் வரையறையை அங்கீகரிக்குமாறும், அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். உலகம் முழுவதிலும் குஃப்ருக்கும், அதன் கையாட்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்த வரையறைக்குள்ளேயே திட்டமிட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஈரான் இஸ்லாமியப் புரட்சி மிகவும் செல்வாக்குப் பெற்றது, தற்காலத்தில் யதார்த்தமானது, முஸ்லிம்கள் வீழ்ந்திருந்த பின்னடைவிலிருந்தும் இழிநிலையிலிருந்தும் முஸ்லிம் உம்மத்தை இஸ்லாமியப் புரட்சி மீட்டெடுத்துள்ளது; முக்கிய விடயமாகிய தலைமைத்துவம் தொடர்பாக பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தில் நிலவிவந்த முரண்பாட்டை இமாம் கொம்மெய்னி அவர்களுடைய அரசியல் இஜ்திஹாத், முடிவுக்குக் கொணர்ந்தது; உம்மத்தின் தலைமைத்துவம் மீதான உரிமையும், அதற்கான கடமையும் வாதத்துக்கிடமின்றி, ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கே பாத்தியதையுடையது; உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் யாவரும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும், விசேடமாக இமாம் கொமெய்னிக்கும் அவர்களுடைய வாரிசுக்கும் தயக்கமெதுவுமின்றி பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்யவேண்டும்; நாமனைவரும், தனித்தனியாகவும் கூட்டாகவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இணைபிரிக்க முடியாத அங்கங்களாவோம்; இஸ்லாத்துக்கு பூகோள எல்லைகள் எதுவும் கிடையாதாகையால், இஸ்லாமியப் புரட்சியின் ஆத்மீக, சித்தாந்த எல்லைகள் உம்மத் முழுவதற்கும் வியாபித்துள்ளன; உலகின் எல்லாப் பாகங்களிலுமுள்ள ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய இயக்கங்களை நாம் மேலும் விருத்தி செய்ய வேண்டும்; உம்மத்தின் எல்லா அங்கங்களிலும் இஸ்லாமியப் புரட்சியின் இலட்சியத்தை அடைந்துகொள்ளத்தக்க வகையில், ஒடுக்குமுறைக்காளாகியுள்ள முஸ்லிம்களின் போராட்டத்துக்கு உதவுவதற்காக எம்முடைய ஆத்மீக, பொருளாதாய, மானிட வளங்கள் யாவற்றையும் நாம் ஒன்றுதிரட்டவேண்டும் என்ற உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்
இந்த விடயங்களைப் பற்றியெல்லாம் கலந்துரையாடுவதற்கு, இந்தக் கருத்தரங்கு மிகவும் பொருத்தமானதாகும்
புதிய இஸ்லாமியப் புரட்சிகள் தோன்றி புதுப்புது இஸ்லாமிய அரசுகளை ஸ்தாபிக்கும் முன் நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், நாம் எங்கு செல்கின்றோம்; எவ்வாறு அங்கு செல்ல முனைகின்றோம் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எமது கடந்த காலத்தின் இடிபாடுகள் தாறுமாறாக சிதறிக்கிடக்கும் வரலாற்றுப் பாதைகளை, ஈரான் இஸ்லாமியப் புரட்சி மீண்டும் திறந்துவிட்டுள்ளது. பிரதான வரலாற்றுச் சிற்பிகள் எனும் எமது அந்தஸ்தை மீட்டிக்கொள்ளவேண்டியது எமது பொறுப்பாகும். மேற்கத்திய நாகரிகத்தின் தோற்றத்தில் இருக்கும் தீய, நாசகார குஃப்ர் சக்தியிலிருந்து முழு மனித இனத்தையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்.
எமக்கு முன்னாலுள்ள எமது எதிர்காலத்தின் முதல் கட்டத்தில், விசேடமாக ஹரமைனின் எதிர்காலம் எனும் அம்சம் தொடர்பாக, உடனடி கடந்த காலம் பற்றியும் அதில் சவூதியின் பங்கு பற்றியும் நாம் விளக்கம் பெற்றிருக்க வேண்டும். துருக்கியின் கலீஃபா, ஹரமைன்மீது கொண்டிருந்த ஆட்சி அதிகாரத்தை இல்லாதொழிப்பதே ஆங்கிலேயரின் கொள்கையாக இருந்தது என, இக்கருத் தரங்குக்காகத் தயாரிக்கப்பட்ட தனியான முன்னாய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார் சகோதரர் இம்ரான் ஹுசைன். இதனை ஆங்கிலேயர் இரு கட்டங்களாக செயற்படுத்தினர். முதற்கட்டமாக, கலீஃபாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டி அதற்குப் பகரமாக அவரை ‘அரபிகளின் தலைவராக’ ஆக்குவதாக மக்காவின் ஷரீஃப் ஹுசைனுக்கு உறுதிமொழி கொடுத்தார்கள். இரண்டாவது கட்டமாக, ஹிஜாஸ்மீது படையெடுத்து அப்பிரதேசத்தைக் கைப்பற்றுமாறு இப்னு சவூதைப் பணித்தனர். அதன் பின்னர், ஷரீஃப் ஹுசைனை மோல்டாவில் அஞ்ஞாதவாசம் நடாத்த ஏற்றுக்கொள்ளச் செய்துவிட்டு, அவருடைய புத்திரர்களுக்கு அகன்ற ஜோர்தான் - ஈராக் முடியரசைக் கொடுத்தனர். இஸ்ரவேலை உருவாக்கும் தமது திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பதாக, பிரிட்டனும் பிரான்சும் மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றியமைத்து, ஃபலஸ்தீனைச் சூழவும் தமது கைக்கூலி அரசுகளை உருவாக்கினர். 1967ம் ஆண்டு, இஸ்ரவேலினால் பைத்துல் முகத்தஸ்(ஜெரூசலம்) கைப்பற்றப்பட்டமை, கவனமாகத் தீட்டப்பட்ட திட்டமொன்றினதும், சுமார் நூறு வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட அதன் செயற்பாட்டினதும் விளைவே என்பதை இங்கு, இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஹிஜாஸ் மீதும் ஹரமைன்மீதும் சவூதி கொண்டிருக்கும் அதிகாரமானது, அப்பிரதேசம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற பிரிட்டனின் திட்டத்தின் ஓர் அம்சமே. ஹரமைன், ஹிஜாஸ் இன்னும் முழு அரேபிய தீபகற்பத்தின் மீதும் ஆலே சவூத் தொடர்ந்து அதிகாரம் கொண்டிருப்பதுதான், மேற்கத்திய கொள்கைகளின் கருப்பொருளாகும். நாம் அல்குத்(பைத்துல் முகத்த)ஸை மீட்டெடுக்க வேண்டுமாயின், முதலில் சவூதி - அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து ஹரமைனை விடுவித்தாக வேண்டும். அல் குத்ஸையும் ஃபலஸ்தீனையும் விடுவிக்கு முன்னர், இந்தப் பிரதேசம் முழுவதையும் தனி இஸ்லாமிய நாடாக மீண்டும் ஒருங்கிணைத்தாக வேண்டும்
மக்காவிலும் மதீனாவிலும் ‘ஒற்றுமைப் பேரணி’களை நடாத்த ஈரானிய ஹாஜிகளுக்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதில் இக்கருத்தரங்குக்கு அக்கறையில்லை என்பதை உறுதியாகக் கூறிவைக்க விரும்புகிறேன்
இலண்டன், ஜனவரி 6–9, 1988
அச்சிட்டு வெளியிட்டோர்:
கிரசன்ட் பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
90, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, கொழும்பு–2, இலங்கை
வெளியீடு:
தி இஸ்லாமிக் பவுண்டேஷன் (இஸ்லாமிய நிலையம்)
90, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, கொழும்பு–2, இலங்கை
No comments:
Post a Comment