by
சவூதி இல்லாமல் இஸ்ரேல் பெரும் பிரச்சினையில் சிக்கும், என்ன விலை கொடுத்தேனும் சல்மானைக் காப்பாற்ற வேணடிய தேவ உள்ளது; என்கிறார் டொனால்ட் டிரம்பம்
முதலாவது உலகப் போரின் போது இன்றைய முழு மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவின் ஒரு பகுதியும் துருக்கிப் பேரரசின் கீழ் இருந்தன. பிரிட்டனும் பிரான்சும் துருக்கிப் பேரரசை வீழ்த்தி மத்திய கிழக்கை துண்டாடின. அங்கு அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள். அரபு பிராந்தியத்தில் அரபுலகின் மத்திய பகுதியில் சவூதி அரேபியா உருவாக்கப்பட்டது. அரபுலகில் முஸ்லிம்களின் நடுவே ஒரு மகுடமாக சவூதி அரேபியாவை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம் உலகை ஆட்டிப் படைப்பது தான் அவர்களின் திட்டம்.
மேற்குலகின் இந்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும இந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும்; இதுவரை சொல்லொனா தீமைகளை விளைவித்துள்ளது. குறிப்பாக இறைவன் அவர்களை எண்ணெய் வளத்தைக் கொண்டு ஆசீர்வதித்த பின்புதான் அவர்கள் இதைச் செய்தார்கள்.
இந்தப் புவியிலேயே அடக்குமுறைக் கொடூரங்கள் நிறைந்த ஒரு நாடு இருக்குமானால் அது சவூதி அரேபியாவாகத் தான் இருக்கும். இஸ்லாமிய சக்திகளை அடக்குவதற்காக அது இன்னமும் தனது கொடூரத்தை தொடருகின்றது. உதாரணத்துக்கு சவூதி அரோபியா அபுதாபி மற்றும் குவைத்துடன் இணைந்து எகிப்தில் முஹம்மத் முர்ஷி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சுமார் 11 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பா தலைமயிலான யூத யுத்தங்கள் அனைத்திலும் சவூதி பங்கேற்றுள்ளது. அவர்களுக்கு உலக மனித உரிமை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. அங்கு அற்பத்தனமான காரணங்களுக்காக பொது இடங்களில் மக்கள் தூக்கில் போடப்படுகின்றார்கள். றிசானா றபீக் போன்ற அப்பாவி இலங்கை சிறுமிகள் தூக்கில் இடப்பட்டார்கள். இவை அங்கு சர்வ சாதாரணம்.
இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பா தலைமயிலான யூத யுத்தங்கள் அனைத்திலும் சவூதி பங்கேற்றுள்ளது. அவர்களுக்கு உலக மனித உரிமை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. அங்கு அற்பத்தனமான காரணங்களுக்காக பொது இடங்களில் மக்கள் தூக்கில் போடப்படுகின்றார்கள். றிசானா றபீக் போன்ற அப்பாவி இலங்கை சிறுமிகள் தூக்கில் இடப்பட்டார்கள். இவை அங்கு சர்வ சாதாரணம்.
வஹ்ஹாபிஸம் என்ற புதிய கொள்கையைப் பரப்புவதற்காக 315க்கும் அதிகமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முஸ்லிம் புனிதப் பகுதிகளை நாசமாக்கினார்கள். இந்த வஹ்ஹாபிஸம் மேற்குலகின் தேவைக்காகவும் நன்மைக்காகவும் தான் அறிமுகம் செய்யப்பட்டது என்பதை முடிக்குரிய இளவரசர் சல்மானே அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார். உள்ளுரில் அவர்கள் கொள்ளையடித்த செல்வம் மேற்குலகில் முலீடு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான டொலர்களைக் கொடுத்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து அnரிக்க மற்றும் யூத ஆயுத கம்பனிகளை அவர்கள் செழுமை அடைய வைத்தார்கள். அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உள்ள மனித உரிமைக் காவலர்கள் என தம்மை அழைத்துக் கொள்பவர்கள் இவற்றின் காரணமாக சவூதி அரேபியாவின் குற்றங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காத்தார்கள்.
முஸ்லிம் உலகில் பெரும்பாலான நாடுகளில் மேற்குலகால் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள கொடுங்கோலர்களே ஆட்சியில் உள்ளனர். முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்றா போன்ற புனிதப் பயணங்களுக்காக சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஒரு நாடும் சவூதிக்கு எதிராக எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளன.
பின் சல்மான் முடிக்குரிய இளவரசராகப் பதவியேற்று பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடட் கையோடு இந்த நிலை மேலும் உச்சத்துக்கு வந்தது.
சவூதி அரேபியா அபு தாபியின் முடிக்குரிய இளவரசர் பின் செயித்தோடு இணைந்து மத்திய கிழக்கின் மிகவும் பழமையான மிகவும் எளிமையான நாடான யெமனில் குண்டு வீச்சுக்களை நடத்தி அந்த நாட்டை துவம்சம் செய்தது. இதனால் இன்று அந்த நாட்டில் பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் மொத்த சனத் தொகையான 22 மில்லியனில் 14 மில்லியன் மக்கள் வறுமையின் விளிம்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அண்மைய மதிப்பீட்டொன்றின் படி இந்த யுத்தம் காரணமாக இதுவரை 57000 யெமன் மக்கள் இறந்துள்ளனர். 85000 சிறுவர்கள் பட்டினியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சவூதி கொடுங்கோலர்களுக்கு அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் ஆதரவு முழுமையாக உண்டு. இந்தப் பின்னணியில் தான் ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் விடயத்திலும் ஏனைய பல நாடுகளின் விடயத்திலும்; சவூதி உளவுப் பிரிவோடு நெருங்கிப் பணியாற்றியவரும் செப்டம்பர் 11 தாக்குதலில் சவூதியின் பங்களிப்பு பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தவருமான ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்குள் வைத்து கண்டதுண்டமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் படி இளவரசர் பின் சல்மானின் உத்தரவுக்கு அமையவே மிக மோசமானதும் கொடூரமான முறையிலும் கஷோகி கொல்லப்பட்டுள்ளார். சியோனிஸ யூதர்களினதும் சுவிசேஷ கிறிஸ்தவர்களினதும் செல்லப்பிள்ளையான இளவரசர் பின் சல்மான் தான் கஷோகியின் கொலைக்கு உத்தரவிட்டார் என்பதை அமெரிக்க புலனாய்வு சேவையான சிஐஏ ஊர்ஜிதம் செய்துள்ளது. மத்திய கி;ழக்கில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் இப்போது வலுவடையத் தொடங்கி உள்ளது.
சவூதி அரேபியா மீது கடுமையான தடைகளைக் கொண்டு வருமாறு அமெரிக்க செனட் உறுப்பினர்களிடமிருந்து பெரும் அழுத்தங்கள் வந்த நிலையிலும் தார்மிகப் பெறுமானங்கள் எதுவும் அற்ற பணத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவூதி அரேபியாவுடன் தொடர்ந்தும் உறுதியான பங்காளியாக இருக்க முடிவு செய்துள்ளார். சவூதி அரேபியாவின் ஆயுதக் கொள்வனவு, உலகில் எண்ணெய் விலையை குறைவாகப் பேணுவதில் அதன் பங்கு, இஸ்ரேலைக் காப்பாற்றுவதில் சவூதியின் அளப்பரிய பங்கு என்பனவற்றை மட்டுமே வலியுறுத்தி உள்ளார்.
கட்டாரை தவறாகக் கையாண்டமை, லெபனான் பி;ரதமரை கடத்தி வந்து தாக்கியமை, அவரை ராஜனாமாச் செய்ய நிர்ப்பந்தம் செய்தமை என்பன காரணமாக ஏற்கனவே சல்மானின் நிலை பலவீனமடைந்துள்ளது.
சல்மானின் எதிர்காலம் நிச்சயமற்றது. அவர் உள்ளுரிலும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளார். வெளிநாட்டில் சக்திமிக்க பங்காளிகளை அவர் இழந்துள்ளார். கடந்த வாரம் ஆர்ஜன்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் இடம்பெற்ற பு20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் அவரை புறக்கணித்துள்ளனர்.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பரம எதிரிகளான இஸ்ரேலுக்கும் சுவிஷேச கிறிஸ்தவர்களுக்கும் அவர் ஒரு பெரும் சொத்து. சுவிஷேச கிறிஸ்தவ தூதுக்குழு ஒன்று றியாத்துக்கு விஜயம் செய்து அவரை சந்தித்து தீவிர பேச்சு நடத்தி உள்ளது. இந்த விஜயத்துக்கான ஒருங்கிணைப்புக்களை இஸ்ரேலிய பிரஜையான ஜோயல் றொசன்பேர்க் என்பவர் வழங்கி உள்ளார். இந்த விஜயம் பற்றிய விவரங்களை இரகசியமாகப் பேணுமாறு பின் சல்மான் கேட்டிருந்த நிலையிலும் அதன் ஏற்பாட்டாளர் அந்த விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மேலும் கோபத்தைக் கிளறும் வகையில் மக்கா பெரிய பள்ளிவாசலின் முக்கிய இமாம் ஒருவர் வெள்ளிக்கிழமை பிரசாரத்தின் போது இலட்சக்கணக்கான உலக மக்கள் பார்த்திருக்க சல்மானை ஒரு சீர்திருத்த வாதி என வர்ணித்துள்ளார். இவற்றுக்கு அப்பால் பெரும்பாலும் கஷோகி கொலை விவகாரத்தில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தான் காஸாவில் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேலை சல்மான் வேணடிக் கொண்டார் என்றும் கருதப்படுகின்றது.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹ{வும் சல்மானைக் காப்பாற்றும் வகையில் மத்திய கிழக்கில் அவரது முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார். சல்மானை பதவி நீக்கம் செய்வதானது அதிகரித்து வரும் ஈரானிய ஷீஆ ஆதிக்கத்தின் நடுவே இஸ்ரேலுடனான சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களின் உறவுகளுக்கான ஒரு ஞானத் தந்தையை இழப்பது போலாகும் என்று இஸ்ரேல் பிரதமர் நம்புகின்றார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு சேவையின் முன்னாள் உளவாளியான எட்வர்ட் சுனோடன் வெளியிட்டுள்ள தகவலில் இஸ்ரேலின் சைபர் பாதகாப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் கஷோகி வேவு பார்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷோகி கொலை அதனைத் தொடர்ந்து சவூதி அரேபியா தனிமைப்படுத்தப்பட்டமை என்பன குறிப்பாக இஸ்ரேலை பாதிக்கும் என எதிர்ப்பாhக்கப்படுகின்றது. காரணம் அந்தளவுக்கு சல்மானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் அண்மைக் காலத்தில் வலுவடைந்துள்ளன. பின் சல்மானின் நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேலுடனான உறவுகள் மேலும் மிக வெளிப்படையாக வலுவடைந்துள்ளன.
அல்சவூத் குடும்பம் தான் இஸ்ரேலின் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளர்கள் என்று மத்திய கிழக்கு கண்கானிப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் சல்மானை மட்டும் அல்ல சவூதி அரேபியாவின் கடைசி அத்தி இலையையும் டொனால்ட் டிரம்ப் பறித்து விட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலை எடுத்துக் கொண்டால் சவூதி இல்லாமல் அது பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும். சவூதியுடன் இஸ்ரேல் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் சவூதியின் உறவு மிகவும் முக்கியமானது. சவூதி இல்லையேல் அங்கு ஒரு பெரிய தளத்தைக் அமெரிக்காவோ இஸ்ரேலோ கொண்டிருக்க முடியாது.
இஸ்ரேல் இராணுவத்துக்கு தேவையான எல்லாவிதமான சேவைகளையும் சவூதி அரேபியா வழங்கி வருகின்றது. போலியான சமயப் போர்வையைப் போர்த்திக் கொண்டு சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் புனிதத் தலங்களான இறை இல்லங்களையும் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு நாடகமாடி வருகின்றது. ஆனால் டிரம்ப்பின் நடவடிக்கைகள் தற்போது சவூதி அரேபியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. இஸ்ரேலைக் காப்பாற்ற சவூதி அரேபிய ஆளும் குடும்பமான அல்சவூத் குடும்பம் அளித்து வரும் பங்களிப்பு பற்றி எம்மில் பலருக்கு எற்கனவே தெரியும். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இது திகைப்பூட்டும் விடயமாக இருக்கும். இரண்டு புனிதத் தலங்களினதும் காவலர்கள் என்று அவர்கள் தம்மை அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்தப் புனித பள்ளிவாசல்கள் இரண்டும் அவர்களை நிராகரித்துள்ளன. பலஸ்தீனத்தில் அவர்கள் இஸ்ரேலிய பிரசன்னத்தை பாதுகாத்து வருவதைப் போல் தான் இந்த விடயத்திலும் நடந்து கொள்கின்றனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களில் அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்ந்தும் இருந்து வருவதற்கும் இவர்களே தான் காரணம் என்பதையும் நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
அல்சவூத் குடும்பத்தின் பல்தசாப்த கால கூட்டணிகளைப் பற்றி எழுத்தாளர்கள் பல ஆண்டுகளாக எழுதி வந்தாலும் கூட டிரம்ப் ஒரு சில நொடிகளில் சாதித்ததை எவராலும் அடைந்து கொள்ள முடியவில்லை. மேலும் அவர்களை நம்ப யாரும் தயாராக இல்லை. முஸ்லிம் உலகம் அவர்கள் மீது காலணிகளை வீசி எறிந்திருக்க வேண்டும்.
சவூதியின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் மேலோங்கத் தொடங்கி உள்ளது. பின் சல்மான் தமது நாட்டுக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கக் கூடாது என்று டுனீஷியாவில் சட்டத்தரணிகள் குழுவொன்று அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. டுனீஷியாவின் ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் நஜீ அல் பகோரி “கஷோகியின் இரத்தத்தின் சூடு இன்னும் தணியவில்லை. அவரைக் கொலை செய்த கொலைகாரர் பின் சல்மானுக்கு இந்த நாட்டில் வரவேற்பில்லை” என்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எகிப்தின் தலைநகர் கய்ரோவுக்கு சல்மான் செல்வதையும் அந்த நாட்டின் சுமார் 100 பேர் கொண்ட ஊடகவியலாளர்கள் குழு ஒன்று எதிர்த்துள்ளது. அங்குள்ள மினதாபிமான மற்றும் துறைசார் நிபுணர்கள் குழுக்களும் அவரின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சவூதி அரசு மனித விழுமியங்களை மீறுகின்றது. சவூதி ராஜ்ஜியத்தில் பணிபுரியும் எகிப்தியர்களின் வாழ்வுரிமை உற்பட பல உரிமைகளை சவூதி மீறி உள்ளது என்று சல்மானின் வரவை எதிர்க்கும் ஊடகவியலாளர்கள் உற்பட ஏனைய துறைசார் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியா இல்லாமல் இஸ்ரேல் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ள விடயம் வெறுமனே அவரது நாக்கு தடுமாறி வந்த வார்த்தைகள் அல்ல. நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் அவர் உதிர்த்த உளரல்களும் அல்ல என்று எகிப்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
நாடுகளுக்கு இடையில் சவூதி அரேபியா ஆடிய மோசமான நாடகத்தை வெளிக்காட்ட முனைந்ததால் தான் கஷோகிக்கு அந்தக் கதி ஏற்பட்டது. அவர் சிந்திய இரத்தம் ஊழலும் மோசடியும் துரோகமும் நிறைந்த சவூதி ஆளும் வர்க்கத்துக்கு முடிவு கட்டும். இத்தகைய குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மஸ்ஜிதுன் நபவி ஆகிய புனிதப் பள்ளிவாசல்களை விடுவிக்கும். இந்தப் பள்ளிவாசல்களின் விடுதலையானது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்கும் வழிவகுக்கும். இவை அனைத்தும் வெகுவிரைவிலோ அல்லது என்றோ ஒரு நாள் நடக்கும். இப்போது ஏற்பட்டு வரும் சுற்றுப்புறச் சூழலும் சர்வதேச நகர்வுகளும் இவற்றுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளன. மொத்தத்தில் சவூதி அரேபியாவின் மகுடம் ஆட்டம் காணத் தொடங்கி உள்ளது என்பதே பெரும்பாலானவர்களின் அபிப்பிராயமாக உள்ளது. (முற்றும்)
No comments:
Post a Comment