எம். ஹம்ஸா ஹனீபாஅல்-இஸ்லாம் மன்றத் தலைவர்.
23-10-1996, Thinakaran DaiIy

இஸ்லாமியக் குடியரசில் நாம் தங்கியிருந்த இரண்டு வாரங்களிலும் மீண்டும் மீண்டும் இதே காட்சியைத்தான் பல முக்கிய நகரங்களில் நாம் காணக்கூடியதாக இருந்தது. 'மில்லியன்' என்ற இலக்கம் கூட அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது என ஒருவரை எண்ண வைக்கும் அளவுக்கு இன்று ஈரானில் மக்கள் வெள்ளம் மில்லியன் கணக்கில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. வாகன நெரிசல் நிறைந்த தெஹ்ரான் நகரிலும் சரி புனித நகர்களான 'கும்' மாநகர், பனிபடர்ந்த தப்ரீஸ், எழில்மிகு இஸ்பஹான் என எங்கு சென்றாலும் அங்கெல்லாம் ஆயத்துல்லா கொமேய்னி அவர்களால் வழிநடத்தப்பட்ட இஸ்லாமியப் புரட்சி ஒரு சர்வ வியாபக நல்லுணர்வையும் நம்பிக்கையையும் தோற்றுவித்துள்ளதை வெட்ட வெளிச்சமாகக் காணக்கூடியதாக இருந்தது. வெறும் துணிச்சலாலும் தூய சமய நம்பிக்கையாலும் வலிமை வாய்ந்த கொடுங்கோல் ஆட்சியொன்றை வீழ்த்திய பெருமிதம் எல்லா இடங்களிலும் எல்லோர் முகங்களிலும் பளிச்சிட்டது. எதேச்சாதிகாரத்திலிருந்து விடுதலை என்ற உணர்வு, கொடுங்கோன்மைகளுக்கெதிரான இஸ்லாமிய வெற்றி என்ற மகிழ்ச்சி ஆரவாரம் அப்பப்பா எழுத்தில் வடிக்க முடியாத அளவு பிரமிப்பை என்னுள் தோற்றுவித்தது அந்த எழுச்சி! அமெரிக்க அறிஞரான பேராசிரியர் தோமஸ் பெலன்டைன் இவ்விதம் அதனை இவ்வாறு வர்ணிக்கிறார்: "இதுவே இஸ்லாத்தின் செயல் வடிவமாகும். வலிமை வாய்ந்த இஸ்லாத்தையே இங்கு நாம் காண்கிறோம்."
புத்தூக்கம்
16 வருடங்களுக்குப் பிறகு இமாம் கொமேய்னி அவர்களின் சிரார்த்த தின வைபவங்களில் பங்கு கொள்வதற்காக இவ்வருடம் ஜூன் மாதம் நான் இஸ்லாமியக் குடியரசுக்கு விஜயம் செய்தபோது இஸ்லாத்தினால் உணர்வூட்டப்பட்டு இமாம் கொமேய்னி அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட புரட்சித் தீபம் இன்னும் அணையாது ஒளி பரப்பி நிற்பதை அவதானித்து அதிசயித்தேன். காரணம், "ஈரானிய மக்கள் புரட்சிப் பாதையிலிருந்து விலகி இஸ்லாமிய அரசு மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரமும் விரக்தியும் கொண்டிருக்கிறார்கள்!" என்றே மேற்கத்திய கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி முகவர் நிலையங்களும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் தமது வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் பல வருடங்களாகப் பறைசாற்றி வருகின்றன. ஆனால் இவ்வாறான அறிவிப்பாளர்களும் எழுத்தாளர்களும் சுமார் 100 நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த, அறிஞர்களும் பத்திரிகையாளர்களும் மதவாதிகளும் அடங்கிய 2000 பேர் கொண்ட குழுவுடன் தெஹ்ரானில் நாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இமாம் கொமேய்னியின் நினைவு மண்டபம் வரை பிரயாணம் செய்திருந்தால் தாம் கொண்டிருந்த கருத்தைத் தவறு என உணர்ந்திருப்பர். தமது கண்களை மறைத்திருந்த தடையை நீக்கி தப்பபிப்பிராயங்களைத் தவிர்த்திருப்பர்.
அக்காலத்தில் இரு பெரும் வல்லரசுகளினால் ஊட்டி வளர்க்கப்பட்ட மத்திய கிழக்கில் அசைக்க முடியாத அரசு எனக் கூறப்பட்ட அந்த ஷாவின் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த இஸ்லாமியப் புரட்சிப் பேரொளி, தமது தலைவரை இழந்த நிலையிலும் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளினதும் ஆதரவுடன் பாத்திஸ ஈராக்கினால் தொடுக்கப்பட்ட எட்டாண்டு யுத்தத்துக்கு முகம் கொடுத்த நிலையிலும் 30 இலட்சம் ஆப்கானிய அகதிகளையும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தாஜிகிஸ்தான், அசர்பைஜான் அகதிகளையும் பராமரித்துக்கொண்டு இன்னும் நிலைகுலையாது நிமிர்ந்து நிற்கிறது என்பதற்கு எமது அண்மைக் கால விஜயத்தின்போது நாம் கண்டவையும் கேட்டவையும் போதுமான ஆதாரங்களாகும். அத்துடன் எந்த விதமான பொருளாதாரத் தடைகளுக்கு மட்டுமன்றி அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களுக்குக் கூட முகம் கொடுக்கும் ஆற்றலை இன்று அந்நாடு பெற்றுள்ளது.
இமாம் கொமேய்னியின் நினைவு மண்டபத்துக்கு நாம் விசேட பஸ்ஸொன்றில் சென்று கொண்டிருந்தபோது வழி நெடுகிலும் ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் வயோதிபர்களும் சாரிசாரியாக தாம் சென்று கொண்டிருந்த திக்கை நோக்கியே விரைந்து கொண்டிருந்தனர். நாம் அந்த இடத்தை அடைந்தபோது பல இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே அங்கு கூடியிருந்து பிரார்த்தனைகளிலிருந்து ஈடுபட்டுக் கொண்டும் அமெரிக்கா இஸ்ரேல் என்பவற்றுக்கெதிரான கோஷங்களை எழுப்பிய வண்ணமும் இருந்ததை நாம் வியப்புடன் அவதானித்தோம்.
இஸ்லாமியக் குடியரசுக்கு இழுக்கை ஏற்படுத்தவும் அதனை அழித்தொழிக்கவும் தம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் மேற்கத்திய அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் தொடர்புத் துறையினரும் எப்படி இந்த யதார்த்த நிலையை 17 வருடங்களின் பின்பாவது உணராமலிருக்கிறார்கள்? என எனக்கு வியப்பாகவே இருந்தது. இந்த வினாவை எம்முடனிருந்த மொரோக்கோ ரோயல் அகடமியைச் சேர்ந்த டாக்டர் அப்துல் ஹாதி டாசி என்பாரிடம் கேட்டேன். "இறைவன் மீதும் தெய்வீக சக்தியின் மீதும் நம்பிக்கையற்றவர்களால் இதனை எப்போதுமே புரிந்துகொள்ள இயலாது" என அவர் கூறிய பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம், புரட்சிக்கு ஆதரவாக மக்கள் வெள்ளம் மடை திறந்து பிரவாகமெடுத்த காட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்பும் மேற்படி மேற்கத்திய ஆய்வாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் ஷாவின் வீழ்ச்சியை எதிர்வு கூற முடியாதிருந்தது ஏன்? என்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அறிஞரான அப்துல்லா டீ டாட் இதே பதிலைத்தான் கூறினார்.
இன்று அமெரிக்கத் தலைவர்கள், அது அதிபர் கிளின்டனாயினும் சரி சபாநாயகர் நியூட் ஜிங்ரிச் அல்லது ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் டோலாயினும் சரி, ஜிம்மி கார்ட்டரின் இழிச் செயல்களினால் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. "உலகின் மிகக் கொந்தளிப்பான பிரதேசத்தில் ஷாவின் தலைமைத்துவத்தின் கீழான ஈரான், மிக உறுதியான அமைதித் தீவாக விளங்குகிறது. இது தங்களுக்கும் தங்களது மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும் அபிமானத்துக்கும் கண்ணியத்துக்கும் கிடைத்த மாபெரும் பேறாகும்" என புரட்சி வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன் ஜிம்மி கார்ட்டர் பிரகடனம் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அவர்களது அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் வைத்துப் பார்க்கும்போது வாஷிங்டன் தலைமைத்துவம் இவ்வாறான முன்னோசனையற்ற கூற்றுகளினால் எவ்வித பாடமும் படிக்கவில்லையென்பது தெரிகிறது. இன்றைய இஸ்லாமியக் குடியரசு, அதன் அரசாங்கம் என்பன தொடர்பாக ஒரு மனம் திறந்த நேர்மையான மதிப்பீடு அவர்களால் மேற்கொள்ளப்பட்டால் அதன் பெறுபேறு வேறாகத்தான் இருந்திருக்கும். அதாவது அந்நாட்டுக்கு விஜயம் செய்யும் பாக்கியம் பெற்றோர், தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டுமின்றி அனைத்து மக்களுடனும் உரையாடவும் உறவாடவும் வாய்ப்பைப் பெற்றிருப்பர். அதன்மூலம் தெஹ்ரான் அரசாங்கத்தை சட்டவிரோதமாகக் கவிழ்க்க காங்கிரஸ் அனுமதித்திருக்கும் 20 மில்லியன் டாலர் மட்டுமல்ல நேரடியான இராணுவப் படையெடுப்பு கூட அவர்களுக்கு வெற்றியைத் தராது என்பது அவர்கள் எப்போதோ உணர்ந்திருப்பர்.
ஈரானில் 40 மில்லியன் மக்கள் உயிர் வாழும் வரை 20 மில்லியன் டாலர் அல்லது 20 பில்லியன் டாலர் செலவிட்டாலும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எவ்வித வெற்றியையும் ஈட்டித் தராது என்பதை எனது கடந்த 17 வருட கால தனிப்பட்ட தொடர்புகளாலும் அவ
ஒரு துன்பியல்
உலகை ஆட்டிப் படைக்கவும் (கோடிக்கணக்கான டாலர் ஐ.நா.வுக்கு கட்டப்பட்ட நிலையிலும் பாதுகாப்புச் சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு) உலகுக்கு சட்டமியற்றும் (டெ மட்டோ சட்டம், ஈரானுடனும் லிபியாவுடனும் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களுக்குத் தடை விதிப்பதன் மூலம்) அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி உண்மையிலேயே மேற்கு நாடுகளுக்கும் உலகின் 100 கோடி முஸ்லிம்களுக்குமிடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்கவே வழிவகுக்கும்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர் பீடமான பாதுகாவல் சபையின் உறுப்பினரான ஆயத்துல்லா அஹ்மத் ஜென்னதித் என்னிடம் ஒரு முறை பின்வருமாறு குறிப்பிட்டார்: "அரபு" முஸ்லிம் நாடுகளின் மன்னர்களும் அதிபர்களும் சர்வாதிகாரிகளும் அவர்களுக்கு இசைவாக நடந்து கொள்வதால் முஸ்லிம் மக்களும் அவர்களுடன் தான் இருக்கின்றனர் என அமெரிக்க தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தப்புக் கணக்குப்போடுகின்றனர். விடுதலை, ஜனநாயகம் மனித உரிமை பற்றியெல்லாம் கத்தும் ஒரு நாடு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஒரு சிலுவைப் போரை முன்னெடுத்துச் செல்வது மிகவும் வருந்தத்தக்கது. எவ்வாறாயினும் அதன் சென்றகால நடவடிக்கைகளை அவதானிக்கும் ஒருவருக்கு அவர்களின் செயல் வியப்பை அளிக்காது. ஏனெனில் இதே அமெரிக்காதான் பெட்டிஸ்டா, ட்ருஜில்லோக், ஸ்ட்ரோஸ்னர், சமோசா, சிங்மன் ரீஸ், மார்க்கோஸ், என்றென்றும் ஷாவுக்கும் கூட உதவியும் ஒத்தாசையும் வழங்கியவர்கள். அவர்கள் இன்னும் பாடம் கற்கவில்லையெனில் உலகம் அவர்களின் வஞ்சகத்தன்மை யூடாகவே அவர்களை அவதானிக்கிறது" தெஹ்ரானில் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனேகமான தூதவர்களிடையே வாஷிங்டன் தமது கைக்கூலியான சவூதி அரேபியா மூலம் ஷியா சுன்னி பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களைப் பிளவுபடுத்த எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பாக கருத்தொருமைப்பாடு காணப்பட்டது.
ஈரானிய ஷியாக்கள், சுன்னி சிந்தனைப் பிரிவின் நான்கு முக்கிய இமாம்களான மாலிக், ஹம்பலி, ஹனீபா, ஷாபி என்போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆசிரியராக இருந்த இமாம் ஜபர் சாதிக் அவர்களைப் பின்பற்றுவோராவர். அத்துடன் அவர்கள் சுன்னிகளைப்போல ஒற்றைவணையே நம்புவதோடு முஹம்மது (ஸல்) அவர்களை இறுதித் தூதராகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒரே குர்ஆனையே இரு சாராரும் பின்பற்றுகின்றனர். ஒரே கிப்லாவை நோக்கியே அனைவரும் தொழுகின்றனர். இருந்தும் சவூதியர்கள் ஷியாக்களுக்கு எதிராக பேசவும், எழுதவும் பிரசாரங்களை மேற்கொள்ளவும் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி முஸ்லிம் உலகின் அறிஞர்களையும் மத குருமார்களையும் விலை பேசி ஈரானுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் ஈரானைப் பற்றி இன்னுமொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அது வெறும் சுலோகங்களைக் கோஷமிடும் ஒரு நாடல்ல. மேற்கத்தியர்கள் மட்டுமன்றி ஈரான் எதிர்ப்பு பிரசாரங்களினால் ஊட்டப்பட்ட தெற்கத்தையர்கள் கூட இந்நாடு மத வெறிக்கொண்ட அடிப்படைவாதிகளாலும் பிற்போக்கு மத குருமார்களாலும் ஆட்சி செய்யப்படும் இன்னொரு அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் உலக நாடென்ற அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.
தவறான கருத்து
அவர்களது கருத்து எவ்வளவு பிழையானது? நான் வருடங்களுக்கு முன்பு கூட இஸ்லாமியக் குடியரசுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டேன். ஆனால் எனது அண்மைக்கால விஜயத்தின் போது அந்நாட்டில் நான் அவதானித்த அபிவிருத்திகள் என்னை எல்லையற்ற வியப்பிலாழ்த்தியது. நான் சென்ற விடமெல்லாம் முன்னேற்றத்துக்குரிய அடையாளங்களான எண்ணற்ற கல்வி நிலையங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், கைத்தொழில் பேட்டைகள், நீர்ப்பாசன திட்டங்கள், நவீன நெடுஞ்சாலைகள், பாலங்கள் என்பவற்றையே காண முடிந்தது. இவ்வளவுக்கும் அந்நாடு எட்டாண்டு தொடர்ச்சியான போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சொத்துக்களையும் செல்வங்களையும் மாபெரும் மனிதர்களைக்கூட அது இழந்தது. நகரங்கள் பல அழிக்கப்பட்டன.
போதாக்குறைக்கு அந்நாட்டுக்கெதிரான விஷமப் பிரசாரங்களும் பொருளாதாரத்தடைகளும் இந்நிலையில் கூட அந்நாடு இலட்சக்கணக்கான அகதிகளைப் பராமரித்து வருகின்றது. பொஸ்னியா முதல் லெபனான் வரை செச்னியா முதல் அல்ஜீரியாவரை பிலிப்பைன்சிலும் கூட இஸ்லாமிய நலன்களுக்காக குரல்கொடுத்தும் உதவியும் வருகின்றது.
(தொடரும்)
(நேற்றுத் தொடர்)
ஈரான் - இஸ்லாத்தினால் உணர்வூட்டப்பட்ட ஒரு நாடு
எம். ஹம்ஸா ஹனீபாஅல்-இஸ்லாம் மன்றத் தலைவர்.
ஆனால் தெஹ்ரான் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் உறைவிடமில்லாத ஒரு குடும்பத்தை காண்பது அரிதினும் அரிது. "தெஹ்ரான் நகரம் தள்ளியக் குறைவான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் இடமாகும். அரசாங்கம் ஏனைய மாகாணங்களில் கூடிய கவனம் செலுத்துவதே இதற்கான காரணமாகும் என எமக்குக் கூறப்பட்டது. ஆனால் இவ்வித முன்னேற்றங்களை ஸியோனிஸக் கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி முகவர் நிலையங்களோ அல்லது சர்வதேச செய்தி தொலைக்காட்சி நிலையங்களோ அல்லது சி. என். என். ஆகவிருந்தாலும் சரி சுதந்திர ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் பி.பி.சி. யாக இருந்தாலும் சரி எமக்கு கூறியதோ காட்டியதோ கிடையாது. அண்மையில் இலங்கை மக்களுக்குக் காட்டப்பட்ட பி.பி. சி. (அப்பட்டமாகத் திரிபுபடுத்தப்பட்ட) நிகழ்ச்சியொன்றில், தொலைக் காட்சி நிலையத்தினர், வடக்கு தெஹ்ரானில் (ஷாவின் ஆதரவாளர்கள் நிறைந்து வாழ்ந்த இடம்) மேற்கத்திய பாணியில் வாழ்க்கை நடத்தும் ஒரு மக்சிஸ எழுத்தாளர் உட்பட குறிப்பிட்ட இன்னும் சிலரை மட்டும் பேட்டிக்கண்டு இஸ்லாமிய குடியரசு தொடர்பாக உண்மைக்கு முரணான தகவல்களைக் கொடுத்ததைக் கண்டு நான் ஆச்சரியமும் ஆத்திரமும் அடைந்தேன். எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளுடனான போர்பற்றிய பி.பி.சி செய்திகளில் குறிப்பாக ஜோர் ஆர்னி போன்ற செய்தியாளர்களின் தகவல்களில் மிகுந்த பரிச்சயம் கொண்ட இலங்கை மக்களுக்கு பி.பி.சியின் விஷமப் பிரசாரங்களையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையும் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. அது புதிய விடயமுமல்ல.
நாம் 1980 இல் ஈரானிலிருக்கும் போது மேற்கத்திய பாணியில் வாழ்க்கை நடத்தும் சுமார் 150 பெண்கள் ஹிஜாபுக்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். அதை யாரும் அவ்வளவு பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. ஆனால் நான் ஹொங்கொங் திரும்பியதும் எனது நண்பர்களும் சகாக்களும் கொமேய்னியின் 'ஹிஜாப்' தொடர்பான கொள்கைக்கு எதிராக முஸ்லிம் பெண்களின் 'மாபெரும்' ஆர்ப்பாட்டம் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். பின்னர்தான் என்ன நடந்துள்ளது என்பதை அறிந்தேன். சுமார் 150 பேரே அடங்கிய இந்தக் கூட்டத்தை டெலிவிஷன் கெமராக்கள் பல கோணங்களில் படம் பிடித்து பெரிதுபடுத்திக் காட்டி ஒரு மாபெரும் எதிர்ப்பு மக்கள் நம்பும் வண்ணம் அந்தச் செய்தி தயாரிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக கைத்தொழில் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக ஈரான் இஸ்லாமிய குடியரசு தனது கலாசார, சமய விழுமியங்களை விட்டுக் கொடுக்காது கணிசமான முன்னேற்றத்தையும், அபிவிருத்தியையும் எட்டியுள்ளமை ஒரு குறிப்பிட்டத்தக்க அம்சமாகும். அபிவிருத்திக்கு "இன்றியமையாதது" என மூன்றாம் உலக நாடுகளுக்கு தமது மேற்கத்திய எஜமானர்களால் கூறப்பட்டிருக்கும் கஸினோ மதுபானசாலைகள், இரவு விடுதிகள், ஆபாச இலக்கியங்கள், மெக் டொனல்ஸ்கள், கொக்கோகோலா போன்றவைகளைப் புகுத்தி நாட்டின் நற்பெயருக்கு களங்கமேற்படாது 21ம் நூற்றாண்டை நோக்கி வீறு நடைபோடுகிறது. ஈரான் இப்போது தெற்கிலுள்ளவர்கள் மட்டுமல்ல வடக்கிலும் கைத்தொழில் செல்வத்த நாடுடகள் கூட மேற்கத்திய பிரசாரங்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது. ஈரானிய மக்களைப் போல் இஸ்லாமிய பெரும்பான்மையினர் "சத்தியம் பொய்மையை இஸ்லாமிய பொய்மை முடிவில் அழிவையே எய்தும்" என்ற வெல்லும் அல்குர்ஆன் வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment