Sunday, November 18, 2018

ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் ஒருவகையான நயவஞ்சக இனஒழிப்புச் செய்ற்பாடுகள்


by Latheef Farook



ஈரான் அணுஆயுதம் ஒன்றை விருத்தி செய்து வருவதாகக் கூறி அமெரிக்காவின் யுத்த வெறி கொண்ட ஜனாதிபதி டிரம்ப் அந்த நாட்டை முழுமையாக ஸ்தம்பிக்கச் செய்யும் வகையிலான பொருளாதாரத் தடைகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தனக்குத் தேவையான ஒரு கைப் பொம்மை ஆட்சியை ஸ்தாபிப்பதே இதன் நோக்கமாகும். சுவிசேஷ கிறிஸ்தவர்களின் தீவிரமான செல்வாக்கின் கீழேயே இந்தத் தடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈவு இரக்கமற்ற சியோனிஸ ஆதரவு சக்திகள், ஆயுத உற்பத்தியால் செழித்தோங்கும் கூட்டாண்மை சாம்ராஜ்ஜியங்கள் என்பனவும் இதற்கு துணையாக உள்ளன.
ஈரானில் முன்னாள் மன்னர் ஷாவின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின் 1979 நவம்பர் 4ம் திகதி ஈரானில் உள்ள அnரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்ட நிகழ்வை குறிக்கும் வகையில் இந்தத் தடைகள் அமுலுக்கு வந்துள்ளன. இது ஒரு வகை நயவஞ்சக வடிவிலான இன ஒழிப்பு முயற்சி என்றே வர்ணிக்கப்படுகின்றது.
ஈரான் ஒரு ஆணு ஆயதத்தை விருத்தி செய்து வருகின்றது என்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது இன்னமும் நிரூபிக்கப்படவும் இல்லை. அவ்வாறான ஒரு ஆயுதத்தை அது அபிவிருத்தி செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகவும் இல்லை. ஆனால் அவ்வாறான முயற்சிகளைக் கைவிடுமாறு வலியுறுத்தியே தடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் சுமார் 300க்கும் அதிகமான அணு ஆயுதங்களை தன்வசம் கொண்டுள்ளது. இதுவரை யாரும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை. அந்த நாட்டின் மீது எவ்வாறான தடைகளும் கொண்டுவரப்படவும் இல்லை. இதுதான் அமெரிக்காவின் நயவஞ்சகமும் நீதியற்ற நிலைப்பாடும் ஆகும்.
இஸ்ரேல் இந்தப் பிராந்தியத்தில் மேற்கொண்டுள்ள மூர்க்கத்தனமான யுத்தங்களையும் இந்தப் பிராந்தியத்தில் நடத்தப்படும் காட்டுமிராண்டித் தனத்தையும் விஸ்தரிப்பு வாதத்தையும் கண்டிக்கின்ற அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற ஒரே நாடு ஈரான் தான். கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரானஸ்;, இஸ்ரேல் அவர்களோடு ஒத்துழைக்கும் மனித உடலைக் கூறுபோடும் சவூதி அரசு என்பன இந்தப் பிராந்திய நாடுகளில் தமக்கு ஆதரவான கைக்கூலிகளை ஆட்சியில் அமர்த்தும் திட்டத்தை மிகவும் சாமர்த்தியமாக அரங்கேற்றி வருகின்றன. அந்த ஆட்சியாளர்களும் தமது ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக தமது மேற்குலக மற்றும் இஸ்ரேல் எஜமானர்களின் கால்களை முத்தமிட்டவாறு ஆட்சி பீடத்தை அலங்கரித்து வருகின்றனர்.
இந்த அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் சக்திகளை இந்தப் பிராந்தியத்தில் துணிச்சலாக எதிர்த்து நிற்கின்ற ஒரே நாடு ஈரான் தான். எனவே இந்தப் பிராந்தியத்தின் எண்ணெய் வளம் மிக்க ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளை எப்படி நிலைகுலைய வைத்தார்களோ அதேபோல் ஈரானையும் மண்டியிட வைக்க வேண்டிய தேவை இந்த நாசகார சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் 1979 முதல் ஈரானிய மக்களின் நிம்மதியை குலைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1979 வரை அந்த நாட்டில் மேற்குலக கைப் பொம்மையாக இருந்த அடக்கு முறை ஆட்சியாளர் மன்னர் ஷா இஸ்லாமியப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது முதல் இது தொடருகின்றது. புதிதாக தமக்கு கிடைத்த எண்ணெய் வளத்தின் மூலம் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்த பிராந்திய ஆட்சியாளர்களதும் மக்களதும் நிம்மதியான அமைதியான வாழ்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது.
ஈரானில் நிறுவப்பட்ட இஸ்லாமிய புரட்சிவாத அரசு அமெரிக்காவுக்கு முற்றிலும் பாதகமாக அமைந்தது. அமெரிக்கா மன்னர் ஷாவுக்கும் அவரது பெயர்போன பயங்கரவாத உளவு பிரிவான ஷவாக்கிற்கும் பக்க பலமாக இருந்தது. ஈரானிய மக்கள் மீது யுத்தங்களும், அழிவுகளும், மரணங்களும் திணிக்கப்பட்டு வந்தன. ஆனால் இவற்றை எல்லாம் சமாளித்து முன்னேற்றப் பாதையில் நடைபோடுவது எப்படி என்பதை கற்றுக் கொண்டு ஈரான் முன்னேற்ற பாதையில் நடைபோட்டது. ஈரானில் இடம்பெற்றது இஸ்லாமியப் புரட்சி என்ற ஒரே காரணத்தினால் அது யூத சியோனிஸ, கிறிஸ்தவ மேற்குலக சக்திகளினதும் அவர்களது கைக்கூலி சவூதி அரசினதும் மேற்குலக நாடுகளோடு மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள வளைகுடாவின் பழங்குடி நாடோடி ஷேக்மாரி;ன் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
அமெரிக்க இஸ்ரேல் பிரிட்டன்; ஐரோப்பிய மற்றும் அவர்களின் கைக்கூலியான சவூதி அரேபியா என்பனவற்றின் தூண்டுதலின் பேரில் அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ{சேன் ஈரானுக்கு எதிராக யுத்தம் தொடுக்க தூண்டப்பட்டார். இதன் விளைவாக இரு நாடுகளிலும் எட்டு வருடங்களாக இரத்த ஆறு ஓடியது. இரண்டு நாடுகளுமே கொலை களங்களாக மாறின. சுமார் பத்து லட்சம் உயிர்களைப் பலியெடுத்த இந்த யுத்தத்தின் செலவு 800 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமானதாகும்.
ஈரானிலும் ஈராக்கிலும் இரத்த ஆற்றில் சடலங்கள் மிதந்தன. மறுபுறத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆயுத உற்பத்திக் கம்பனிகள் மத்தியில் பணம் கரைபுரண்டோடியது. இந்த சூழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஈரான் மீது தடைகளைக் கொண்டு வந்து அந்த நாட்டை அடிபணியச் செய்ய அமெரிக்க இஸ்ரேல் யுத்த வெறியர்கள் ஐக்கிய நாடுகள் சபை மீது தமது செல்வாக்கை பிரயோகித்தனர். 2006 ஜுலை 31 முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பல்Nவுறு தீhமானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமெரிக்காவுடன் சேர்ந்து ஐNhப்பிய யூனியன், கனடா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், சுவிட்ஸர்லாந்து மற்றும் இந்தியாவும் கூட ஈரானில் இருந்து பொருற்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்தன. அதேபோல் ஈரானின் அணுத் திட்டத்தோடு தொடர்புடையது எனக் கூறப்படும் பல்வேறு பொருள்கள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என்பனவற்றின் ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.
அமெரிக்காவினதும் சர்வதேச யூத சக்திகளினதும் ஈரானை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகள் மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றைப் புரிந்து கொண்ட ஈரான் அடிபணிய மறுத்தது. தனது எண்ணெய் வளத்துக்கும் சக்தி வளத்துக்கும் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஈரானுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஈரானில் இருந்து பல சர்வதேச எண்ணெய் கம்பனிகள் வாபஸ் வாங்கிக் கொண்டன. அதன் காரணமாக அதன் எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்தத் தடைகளை அமுல் செய்தவர்களுக்கு ஈராக்கில் தாங்கள் ஏற்படுத்தியது போன்ற ஒரு பெருந்துயரை ஈரானிலும் ஏற்படுத்திவிட்டோம் என்பது புரிந்தது. இந்தத் தடைகளானது ஒரு வகை இன ஒழிப்பு நடவடிக்கைகள் என்று ஈராக்கில் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்த டெனிஸ் ஹாலிடே வர்ணித்துள்ளார்.
உதாரணத்துக்கு ஈராக்கில் வறுமை, பட்டினி, போஷாக்கின்மை, அத்தியாவசிய மருந்துகள் இன்மை, அடிப்படை சுகாதர மற்றும் ஆரோக்கிய வசதிகள் இல்லாமை என்பன காரணமாக ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என வயது மற்றும் பால் வித்தியாசம் இன்றி தினசரி மரணத்தை தழுவும் நிலைமை ஏற்படுத்தப்பட்டது. சிறுவர்களின் பாடசாலை செல்லும் அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகள் என்பன கூட மறுக்கப்பட்டன. இந்தத் தடைகள் விதிக்கப்படுவதற்கு முன் பக்தாத் நகர வீதிகளில் பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்லும் மாணவர்களை தாராளமாகக் காணக் கூடியதாக இருக்கும். ஆனால் தடைகளுக்குப் பின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது கல்வியைக் கைவிட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமது குடும்ப பாரங்களைச் சுமப்பதற்காக அவர்களில் பலர் மோசமான பல தொழில்களைத் தெரிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஈராக் மீது விதிக்கப்பட்ட தடைகள் சுமார் ஐந்து லட்சம் சிறுவர்களின் மரணங்களுக்கு வழிவகுத்தன. 1996ம் ஆண்டு அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மடலின் அல்பிரைட் தாங்கள் இழைத்த கொடுமைகளின் காரணமாக ஐந்து லட்சம் சிறுவர்கள் மரணம் அடைந்ததை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். இவர்கள் தான் ஜனநாயகம், மனித உரிமை, சுதந்திரம் என வாய்கிழிய பேசித் திரியும் உலக அரசியல் தலைவர்களாகவும் உள்ளனர்.
ஈராக்கிற்கான ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் டெனிஸ் ஹாலிடே ஐ.நாவுடன் 34 வருடங்கள் பணியாற்றிய பின் தனது பதவியை இராஜினாமா செய்தார். ஐ.நா தடைகள் ஈராக் பொது மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்ததுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் தனது பதவியை துறந்தார். “பொருளாதாரத் தடகள் என்பது முற்றிலும் வங்குரோத்தான ஒரு செயற்பாடு. நாங்கள் ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்…ஒவ்வொரு மாதமும் சுமார் ஐயாயிரம் சிறுவர்கள் மரணிக்கின்றனர். இதை நாம் மிக இலகுவாக அனுமதித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம். இவ்வாறான மரண எண்ணிக்கையைத் தரும் ஒரு திட்டத்தில் தொடர்ந்தும் பங்கேற்க நான் விரும்பவில்லை” என்று அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் இரண்டு தசாப்தங்கள் கழித்து 2018 நவம்பர் ஐந்தில் அமெரிக்கா இதே விதமான ஒரு அராஜகத்தையும் அநியாயத்தையும் ஈரான் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
2015 அணுத் திட்ட உடன்பாட்டின் கீழ் நீக்கப்பட்ட எல்லா தடைகளையும் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஈரானையும் அதனோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளையும் அது குறி வைத்துள்ளது. ஈரானுடனான அணு திட்ட உடன்பாட்டில் ஜெர்மன், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்ற நிலையிலேயே அமெரிக்கா அதில் இருந்து வெளியேறி உள்ளது. இந்த நாடுகள் அமெரிக்கா மீண்டும் தடைகளைக் கொண்டு வந்துள்ளதை வன்மையாக எதிர்த்துள்ளன. ஈரானுடன் சட்டபூர்வமான வர்த்தகத்தில் ஈடுபடும் ஐரோப்பிய நாடுகளின் கம்பனிகளுக்கு அவை உதவி வழங்க உறுதி அளித்துள்ளன. மாற்றுக் கொடுப்பனவு முறைமை ஒன்றையும் அவை வகுத்துள்ளன. இவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடும் கம்பனிகள் அமெரிக்காவின் தண்டனை முறையில் சிக்காமல் கைகொடுக்கவும் அவை முன்வந்துள்ளன.
டிரம்ப்பின் இலக்கு அணுத் திட்டம் தொடர்பாக ஈரானுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு இருக்கும் உடன்பாட்டை கிள்ளி எறிவதாகும். ஈரானின் பொருளாதாரத்தை முற்றாக நாசமாக்குவதாகும். சிரியா ஈராக் மற்றும் யெமன் ஆகிய பிராந்திய நாடுகளில் ஈரானுக்குள்ள பிடியை தளரச் செய்வதாகும். அத்தோடு ஈரானின் ஆளும் தரப்பை முற்றாகச் சரிய வைப்பதாகும். இவற்றை செய்வதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கம் நிலை நிறுத்தப்படும். இந்த அச்சுறுத்தல் இந்தியா முதல் பாகிஸ்தான் வரை நீடிக்கும்.
டிரம்ப்பின் தனிப்பட்ட சட்டத்தரணியும் மிக உறுதியான யூத இஸ்ரேல் ஆதரவாளருமான ரூடி குய்லியானி டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பேசும் போது டெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தை இலக்காக வைத்தே ஈரான் மீதான தடைகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது ஒரு சில நாற்களில் அல்லது வாரங்களில் அல்லது ஒரு சில மாதங்களிலோ வருடத்திலோ கூட நடக்கலாம் ஆனால் அது எப்படியும் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஐரோப்பியர்களுக்கு ஈரானுடனான உடன்படிக்கையை தொடர்ந்து பேண வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. காரணம் அது ஈரான் அணுஆயுதம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதைத் தாமதிக்கச் செய்யும். மாறாக இந்த உடன்பாடு தூக்கி எறியப்பட்டால் ஈரான் இரகசிய இடங்களில் இதன் யூரேனிய செறிவூட்டல் திட்டத்தை தொடங்கும். இதை எவராலும் கண்டு பிடிக்க முடியாமல் போகும் அதன் விளைவு ஈரான் அணு குண்டொன்றை பெற்றுக் கொள்ளவே வழியமைக்கும். இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடாது என்பதுதான் ஐரோப்பிய நாடுகளின் திட்டமாகும். காரணம் ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதென்பது மோசான மோதல்களுக்கு வழியமைக்கக் கூடும். ஈரானை பேச்சுவார்த்தைக்கு வருமாறு டிரம்ப் விடுத்துள்ள அழைப்பை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. ஆனால் புதிய தடைகளை அமெரிக்கா தன்னிச்சையாகவும் பலவந்தமாகவும் திணித்துள்ளது என்பதே அந்த நாடுகளின் நிலைப்பாடாகும். இவை யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்டதாகும். இத்தகைய தடைகளை விதித்து ஈரானை பேச்சுவாத்தைகளுக்கு பணிய வைப்பது என்பதும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது என்பதே இந்த நாடுகளின் கருத்தாகும்.
தடைகளின் தாக்கம் ஈரானிய மக்களை வாட்டி அது அவர்களை பேச்சுவாத்தைக்கு அழைத்து வரும் என அமெரிக்கா நம்புகின்றது. ஆனால் அந்தத் தடைகளை இலகு படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

No comments:

Post a Comment