Tuesday, August 19, 2014

'கிலாபத்'தை நிறுவுவது எப்படி?

 -ஜஃபர் பங்காஷ்-




 -ஜஃபர் பங்காஷ்-


 





















தக்ஃபீரி குழுவின் திடீர் வெடிப்பு. இராக் - ஷாம் இஸ்லாமிய அரசு (
Islamic state of iraq and sham), (சிரியா) ISIS திடீரென வெடிக்கிறது. இப்பின்னணியில் கிலாபத் பிரகடனம் முழங்கியது. 



திடீர் வெடிப்பின் ISIS அரசும் கிலாபத் பிரகடனமும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஸீராவின் ஒளியில் விளங்கிக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானதும் அவசரமுமான தேவையாகும்.

இஸ்லாமிய அரசில் (கிலாபத்) வாழ்வது அல்லது இஸ்லாமிய அரசொன்றினை நிறுவ அயராது உழைப்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகும்.. இதனை அறிந்த அர்ப்பணித்த முஸ்லிம்கள் இவ்விடயத்தில் ஒன்றுபடுவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு நாம் நம் கவனத்தை குவிக்க வேண்டிய அம்சம், கிலாபத்தை அடைந்து கொள்ள வேண்டிய படிமுறைகள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். 


முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அல்குர்ஆன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா, ஸீரா என்பன எல்லா வழிகாட்டல்களுக்கும் அடிப்படியானவை. குர்ஆன் இஸ்லாமிய வாழ்விற்கான பொதுவான அடிப்படை விதிகளை எடுத்துக் கூற சுன்னாவும் ஸீராவும் செயற்பாடு ரீதியான வடிவங்களை விளக்கி நிற்கின்றன. 


நபித்துவத்தின் 23 வருட கால பணியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசொன்றினை எவ்வாறு நிறுவுவது என்பதை அழகாக செய்து காட்டியுள்ளார்கள். 
றைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தியாகமிக்க கொள்கைக்காக தங்களை அர்ப்பணம் செய்த ஒரு சிறு குழுவினரும் மக்காவின் ஆரம்ப கால பதின்மூன்று வருட கால வாழ்க்கையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். மக்கத்து பட்டணத்தரசு அவர்களை வதைத்து துன்புறுத்தி சித்திரவதைகள் செய்தது. மக்கத்து பட்டணத்து அரசின் அநீதி அக்கிரம் ஊழல் அடக்குமுறை என்பவற்றிக்கு மாபெரும் சவாலாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டமைதான் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் கொள்கையைக் கொண்ட தோழர்களும் பட்ட வேதனைக்கு அடிப்படைக் காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அவனது அன்புநபிக்கு புலம்பெயர் -ஹிஜ்ரத்- செய்வதற்கு அனுமதி வழங்கினான். மதீனத்து இஸ்லாமிய அரசு மதினாவில் நிறுவப்பட்டது. 


மக்கத்து புலம்பெயர்வு -ஹிஜ்ரத்- தன்னார்வ புலம்பெயர்வல்ல. மக்கத்து முஷ்ரிகுகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை கொலை செய்திட திட்டம் வகுத்தனர். ஆனால் தான் பிறந்த நகரத்திலிருந்து அவர்களை வெளியேறுவதற்கு அல்லாஹ் பாதுகாப்பு வழங்கினான். 


மதீனத்துக்கு மாநபியின் வருகையோடு நேர்மை, நீதி என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. மதீனத்து பட்டணத்தில் வாழ்ந்த எல்லா மக்கள் தொகுதியினரும், முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் யூதர்கள் - மற்றவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ மதீனத்து உடன்படிக்கை மூலம் வழி வகுக்கப்பட்டது. 

உரிமைகளும் பொறுப்புக்களும் எல்லோருக்கும் வழங்கப்பட்டன. மதீனத்து மண்ணில் வாழ்ந்த பல்வேறு வகையினரான மக்கள் தொகுதியினரை இவ்வுடன்பாட்டுக்கு கீழ் கொண்டு வர எதுவித பலப்பிரயோகமோ, வற்புறுத்தலோ மேற்கொள்ளப்படவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க முக்கிய விடயமாகும். 





மக்கத்து முஷ்ரிகுகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்  அவர்களின் தோழர்களையும் சமாதானமாக நிம்மதியாக வாழவிட்டு வைக்கவில்லை. முஷ்ரிகுகள் இவர்களைப் பின்தொடர்ந்தனர். பல தாக்குதல்களை இவர்கள் மீது மேற்கொண்டனர். முஸ்லிம்கள் சில வேளைகளில் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தனர் சில வேளைகளில் பின்னடைவுகளையும் கண்டனர். ஆனால் இறுதியாக முஸ்லிம்கள் வெற்றிகொண்டனர்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய ஸீராவிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஹி 8ம் ஆண்டு நடைபெற்ற மக்கத்துவிடுதலை. இப்பாடம் தற்போதைய எமது தலைப்புக்கு மிகவும் முக்கியமான விடயமாகும். 


இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மக்கத்து முஷ்ரிகுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சில விதிகளை அவர்கள் மீறி நடந்து கொண்டனர். ஒரு முஸ்லிமை கொலை செய்ததன் மூலம் அவ்வுடன்பாட்டு விதிகளை மீறினர். மக்காவின் புனித எல்லைகளுக்குள் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது.  இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் எதுவித யுத்தமும் செய்யாமல் இரத்தம் சிந்தாமல் மக்காவிற்குள் நுழைந்தார்கள். கஃபதுல்லாஹ்வில் அபயமடைந்தவர்களுக்கும் மக்காவில் வீட்டிலிருந்தவர்களுக்கும் பாதுகாப்பும் உயிர் உரிமையும் உத்தரவாதம் வழங்கப்படுமென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பகிரங்க அறிவித்தல் விடுத்தார்கள்.
ஓப்பந்தத்தின் அடிப்படையிலும், தேச வழமைச் சட்டத்தின் அடிப்படையிலும் மக்கத்து முஷ்ரிகுகளை அணியாக நிறுத்தி அவர்களின் குற்றச் செயல்களின் பட்டியலடிப்படையில் சிரச்தேசம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பழிவாங்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்த போதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்; பழிவாங்கல்களுக்கும்  இரத்தம் சிந்துவதற்கும் பதிலாக மன்னிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள். 


ஆனால் இன்று இராக்கில் நடப்பது என்ன?  தங்களைத் தாங்களே ISIS என நாமம் சூட்டிக் கொண்டும் இராக்கில் நடத்தி வரும் பயங்கரவாதம் முற்று முழுதாக அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்யும் இந்த ISIS இற்கும் அதன் தலைவர்களுக்கும் மனித உயிரின் புனிதத்துவம் புரியவில்லை.
மிகவும் பெறுமதியான எண்ணக் கருக்களான ஜிஹாத், இஸ்லாமிய அரசு என்பனவற்றை கொச்சைப்படுத்தி தப்பர்த்தம் கற்பிக்கின்றனர். 


மனித படுகொலைகள், சரணடைந்த போர் வீரர்களை படுகொலை செய்தல் இந்த ISIS இன் கையெழுத்துக்களின் குறியீடுகளாக மாறிவிடுகின்றன. இவர்கள் தான் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவபாடுபடுவதாக தம்பட்டமடித்து கொள்கின்றனர். கலீமாவை பொறித்த கொடியினை ஏந்திக் கொண்டு அதன் பின் அணிதிரண்டுள்ள வாழ்வில் வெறுப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் இவர்களின் இஸ்லாத்தைப் பற்றிய குறைமதியும், இஸ்லாத்திற்கெதிரான ஆட்சியாளர்களுடனான கூட்டிணைப்பும் அவர்களின் உண்மையான நிகழ்ச்சித் திட்டத்தை அம்பலப்படுத்துகின்றது. இவர்கள் முஸ்லிம் உலகின் அல்லது வெளியே உள்ளவர்களின் -பிசாசுகளின்- கைக்கூலிகளே தவிர வேறு யாருமில்லை. 


கொடுங்கோல் முடியரசுகளுடன் கூட்டுச்சேர்வதாலோ கீழத்தேய சியோனிசச் சக்திகளுடன் கூட்டிணைவதாலோ  இஸ்லாமிய கிலாபத்தை நிறுவி விட முடியாது. இது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பாடான நடவடிக்கையாகும். 


சஊதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற ஆட்சியாளர்கள் உண்மையில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பினால் அவர்களின் நாடுகளை அந்த நல்ல பணியின் ஆரம்பதலங்களாக- முன்மாதிரியாக அமைத்துக் கொள்ளலாம். நேர்மை, நீதி என்வபற்றிக்கான கூக்குரல் அந்நாட்டில் ஒலிக்கின்ற போது ஊழல்களுக்கு எதிரான ஒரு முற்றுப் புள்ளியாக இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான கோஷம் மாற்றத்தை உண்டாக்கும். 


மட்டமான இஸ்லாமிய அறிவைக் கொண்ட ஒரு முஸ்லிம் கூட குர்ஆன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆதரவு வழங்காத, வழங்கமுடியாத, நியாயப்படுத்தமுடியாத ISIS இன் காட்டுமிராண்டிதனமான கொடுஞ் செயல்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.? இஸ்லாமிய அரசு அப்







பாவி மக்களின் எலும்புக் கூடுகளின் மீது நிறுவப்படுவதல்ல. அவர்களின் இரத்த வெள்ளத்திலே இஸ்லாமிய அரசை ஓட்டி விடவும் முடியாது. இந்த விதியின் கீழேதான் கீழைத்தேயவாதிகளினதும் சியோனிஸ்ட்களினதும் அரசுகள் நிறுவப்படுவதை நாம் வரலாற்று நெடுகிலும் கண்டு வருகின்றோம். 

எனவே இஸ்லாத்தின் முக்கியமான எண்ணக் கருக்களை கடத்திச் செல்வதற்கு வழிபிறழ்ந்த இந்த ISIS கூட்டத்தினருக்கு முஸ்லிம்கள் அனுமதி வழங்க முடியாது. அவர்களுடன் எவ்வித சமரச போக்கையும் கைக்கொள்ள முடியாது.
எனவே ISIS என்ற தீவிரவாத இயக்கம் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட அமெரிக்க இஸ்ரவேலின்; கூட்டுக் கலவை. இது இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் இல்லாதொழித்து முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக புறப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கம் நீண்டகாலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. இருப்பினும் இதன் செயற்பாடுகள் இஸ்லாத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை தெளிவாக அடையாளம் காண்பது முஸ்லிமான ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். 

No comments:

Post a Comment