அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநமாம் போற்றி
ஹஜ்ஜூடைய காலம், ஆன்மீக வசந்தத்தின் பருவமாகும். உலகின் அடிவானத்தில் ஏகத்துவத்தில் ஒளிக் கீற்றுக்கள் பளிச்சிடுகின்ற காலம் ஆகும். அதன் கிரியைகளை ஒரு பரிசுத்தமான நீரூற்றுக்கு ஒப்பிடலாம். ஹஜ் செய்பவர் அதில தமது பாவங்களினதும அலட்சியத்pனதும் அசூசிகளைக் கழுவித் தூய்மையாக்கிக் கொள்ளவும் இறைவன் வழங்கிய இயல்புளின் ஜோதியை தன் இதயத்திலும் உள்ளுணர்வுகளிலும் மீளவைக்கவும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
மீக்காத்தில் வைத்து தத்தமது பெருமையினதும் வேறுபாட்டினதும் ஆடைகளைக் களைந்து விட்டு அனைவருக்கும் பொதுவான வெள்ளை நிற இஹ்ராமை அணிவது உலக முஸ்லிம் உம்மத்தின் வேறுபாடுகள் அந்த தனித்துவத்தை எழுதியம்புகிறது. அத்துடன், உலகெங்கும் வாழுகின்ற முஸ்லிம்; மத்தியில் ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் நிலவ விடுக்கும் அழைப்பையும் பிரதிபலிக்கிது.
ஹஜ் அழைப்பு ஒரு புறத்தில் 'உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான். அவனுடனே சரணடையுங்கள், பணிவுடையோருக்கு நன் செய்தி சொல்லுங்கள் (ஹஜ்:34) என்பதாகும். மறுபறத்தில், 'புனித இறையில்லத்தை நாம் உள்ளுர்வாசிகளும், வெளியூர்வாசிகளுக்கும் சமமான நிலையில் முழு மனித சமுதாயத்துக்குமாக ஆக்கியிருக்கிறோம்.'(ஹஜ்:25) என்பதாகும். இந்த வகையில் கஃபாவானது, தவ்ஹீத் எனப்படும் ஏகத்துவத்தின் சின்னமாக இருப்பது போல் முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கியம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் என்பனவற்றுக்கான அழைப்பை பிரதிபலிக்கின்றது.
இறையில்லத்தை வலம் வந்து இறைத்தூதரைச் தரிசித்துச் செல்ல வேண்டுமென்ற ஆவல் பொங்க உலகின் நாலாபக்கங்களிலும் இருந்து வந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜில் குழுமி உள்ளனர். இவர்கள் தம் மத்தியிலான சகோதர இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது முஸ்லிம் சமுதாயம் எதிhநோக்கியுள்ள ஏராளமான வழிகளுக்கு ஒத்தடமாக அமையும்.
இஸ்லாமிய உலகின் மீது ஆவேசம் கொண்டுள்ள பல்வேறு சக்திகள் முன்னெப்போதையும் விட நிகழ்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயலாற்றுவதை பிரத்தியட்சமாக காண்கின்றோம், ஆகவே, முஸ்லிம் உம்மத் ஐக்கியத்தோடும் ஒத்துழைப்போடும் வாழவேண்டிய தேவை முன்னரை விட அதிகமாக உணரப்படுகின்றது.
இன்று, எதிரியின் இரத்தம் தோய் கைகள் முஸ்லி உலகின் பல பாங்களில் பகிரங்கமாகவே அடாவடித்தனத்தில் இறங்கியுள்ளன. பலஸ்தீன மக்கள் சியோனிச ஆக்கிரமிப்பில் நாளுக்கு நாள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். மஸ்ஜிதுல் அக்ஸா பயங்கரமான ஓர் ஆபத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. காஸாவில் நடைபெற்ற சோகமயமான இன ஒழிப்புக்குப் பிறது மக்கள் மிகக் கொடுமையான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளரின் கால்களின் கீழ் சிக்குண்டுள்ள ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் புதயதொரு விபரீதம் நடக்கிறது. ஈராக்கில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் அம்மக்களது அமைதியான வாழ்வையும் நிம்மதியையும் பறித்துள்ளது. யெமனில் நடந்தேறுகின்ற சகோதரர்களையே அழிக்கும் நிகழ்வு புதிதாக இஸ்லாமிய உம்மத்தின் இதயத்தில் புதிய வழுவை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில் ஆண்டுகளாக இராக், ஆப்கான்pஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரங்கேற்றப்படுகின்ற கலகங்கள், போர்கள், குண்டுவெடிப்புக்கள் பயங்கரவாத செயற்பாடுகள், குருட்டுத ;தனமான மனிதப்படுகொலைகள் எங்கு எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். அமெரிக்கா தலைகையிலான மேற்கு நாடுகளின் படைகள் அதிகார பூர்வமாக சொந்த வீட்டில் நுழைவது போன்று இப்பிராந்தியத்தில் நுழைவதற்கு முன்னர் இத்தகைய துன்பங்களைக் காணவில்லையே அது ஏன்?
ஆக்கிரமிப்பாளர்களே ஒரு புறத்தில் மக்கள் எழுச்சிகளையும் உரிமைப் போராட்டங்களையும் பல்ஸ்தீன் லெபனான் போன்ற நாடுகளில் பயங்கரவாதம் என வர்ணிக்கின்றன, அதே வேளை, இப்பிராந்திய மக்கள் மத்தியில் இனவாத, பிரிவினைவாத பயங்கரவாத்ததைச் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியம் என்பன ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளின் ஏகாத்திபத்திபத்தின் கீழும் பின்னர் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழும் அடிமைப்படுத்தப்பட்டு இழிவு படுத்தடுத்தப்பட்டன. அவற்றின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன அவர்களது சுதந்திர உணர்வுகள் துவம்சம் செய்யப்பட்டன. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் பேராசைகளுக்கு இந்த சமுதாயங்கள் பணயமாகின.
எனினும் இந்த சமூகஙகளில் தோன்றிய எதிர்ப்பு; போராட்டங்களிம் இஸ்லாமிய எழுச்சியும் இந்நிலையைத் தொடரவிடாமல் உலகளாவிய ஏகாதியபத்தியங்களைத் தடுத்து நிறுத்தின. உயிர்த்தியாயம், இறைவனை அடைவதற்கான போராட்டம் முதலிய பரிமாணங்கள் இஸ்லாமிய போராட்ட வடிவங்களில் தோற்றம் பெற்றன. இவற்ளை எதிர்கொள்ளும் சக்தியற்ற ஆக்கிரமிப்பாளர்கள் வேறுவிதமான ஏமாற்று வித்தைகளைக் கைக் கொண்டு பழைய ஏகாதியபத்துக்குப் பதிலாக புதியதொரு வடிவில் தம் ஆக்கிரமிப்பைத் தொடர முனைந்தனர்.
இஸ்லாம் தலைகுனிய வேண்டும் என்பதற்கான ஏகாதிபத்தில் அரக்கன் தன் அத்தனை சத்திகளையும் களமிறக்கியுள்ளது. இராணுவப் பலம் முதற்கொண்டு, பகிரங்க ஆக்கிரமிப்பு, தீய பிரசார யுத்தம், பொய்களையும் வசந்திகளையுமே பரப்புகின்ற ஊடக நிறுவனங்கள், ஆக்கிரமிப்பு வழியமைக்கும் விதத்தில் குழுக்களை பலப்படுத்தி மோதவிடுவது, மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுவது போன்ற விநியோகமும் பிரசாரமும் இளைஞர்களது மனவுறுதி திட நம்பிக்கை, ஒழுக்கம் என்பனவற்றை அழித்தொழுத்தல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் இயக்கங்களுக்கு எதிரான அரசியல் ரீதியான நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது அதற்கு இன ரீதியான முரண்பாடுகளையும் பிரிவினைவாத அம்சங்களையும் சகோதரர்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகைமையாக மாற்றுவது என முடிந்த எல்லாவித உத்திகளையும் ஏகாதிபத்திபம் பிரயோகிக்கிறது.
ஏதிரிகள் விரும்புக்கின்றவாறான தப்பெண்ணம், தீய நோக்கு என்பவற்றுக்குப் பகரமாக முஸ்லிம் சமுதாயங்கள் மற்றும் குழுக்கள் மற்றும்; முஸ்லிம் இனங்கள் மத்தியில் பரஸ்பர அன்பு, நல்லெண்ணம், ஒத்துழைப்பு என்பன இடம்பிடிக்குமெனில், துஷ்ட எண்ணம் கொண்டோரின் திட்டங்களிலும் சதிகளிலும் பெரும்பான்மையானவை தோல்வியடைந்து விடும் முஸ்லிம் உம்மத்தைக் காவு கொள்ள நாளாந்தம் தீட்டுகின்ற திட்டங்கள் செயலிழந்து விடும். இந்த உயரிய நோக்கை அடைந்து கொள்வதற்காக மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஹஜ் ஆகும்.
முஸ்லிம்கள் தமது பொதுவான அடிப்படைகளை வழங்கும் குர்;ஆன் மற்றும் நபிவழியின் வழிநின்று பரஸ்பர ஒத்துழைப்பு நல்லிணக்கமும் கௌ;வதன் மூலம் பன்முகம் கொண்ட ஏகாதிபத்திய அரக்கணை வெல்ல முடியும். பெருந் தலைவர்கள் இமாம் கொமெய்னியின் அடியொற்றிப் போராடிய ஈரானிய சமுதாயம் இப் போரட்டத்தின் வெற்றிககு சிறந்த உதாரணமாக விளங்குகின்றனர். ஈரானில் அத்தகைய சக்திகள் தோல்வியையே கண்டன.
முப்பது ஆண்டுகளாகத் திட்டிய சதித் திட்டங்கள் இராணுவச் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எட்டு ஆண்டுகால திணிக்கப்பட்ட யுத்தம், பொருளாதராத் தடை, உடைமைகள் கபளீகரம், உளவியல் ரீதியான போர் ஊடகப் படையெடுப்பு, முதற் கொண்டு அறிவு, விஞ்ஞானத் துறைகளில் அபிவிருத்திக்கு தடையேற்படுத்தல், அணுசக்தி ஆய்வை ஈரானிய நிபுணர்கள் மெற்கொள்வதை எதிர்ப்பது, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் போது அடிப்பட்டமான அரங்கேற்றிய ஆத்திரமூட்டல்களும் தலையீடுகளும் என அத்தனை செயற்பாடுகளும் எதிரிகளுக்கு தோல்வியையும் குழப்பத்தையும் 'ஷைத்தானின் சதிகள் எப்போதும் பலவீனமானவை' (அந்நிஸ76) என்ற திருமறைவசனத்தை மீண்டும் ஒரு முறை ஈரானிய மக்களின் கண்முன் யதார்த்தபூர்வமாகத் காட்டியது.
உலகின் ஏனைய பகுதிகளிலும் கூட ஈமானிய உறுதியொடு பேராதிக்க சக்திகளுக்கு எதிரான மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டங்களும் மக்களுக்கும் வெற்றியையும் எதிரிக்கு ஏமாற்றத்தையும் தோல்வியையுமே தந்தன. கடந்த மூன்று வருடங்களுக்குள் நடாந்த லெபனான் மக்களது 33 நாள் வெற்றியும் காஸா மக்களின் பொறுமையான போராட்ட வெற்றியும் இந்த உண்மையை நிரூபிக்கும் உயிர்வாழும் சான்றுகளாகும்.
பொதுவாக ஹஜ் பாக்கியத்தை அடைந்த எல்லா ஹாஜிகளுக்ம் குறிப்பாக இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் பிரசாரகர்கள் குத்பா நிகழ்த்துனர்கள் இரண்டு ஹரம்களினதும் குத்பா இமாம்கள் எல்லோருக்கும் நான் வழங்குகின்ற உறுதியான ஆலோசனை இது தான், தயவு செய்து நீங்கள் உங்களத நிகழ்காலம் பணியை சரியாக இணங்காண வேண்டும். உங்கள் மக்களுக்கு இஸ்லாத்தின் எதிரிகளின் சதித்திட்டங்களை விளக்கிக் காட்ட வேண்டும். முஸ்லிம்களை பரஸ்பர அன்பு மற்றும் ஒற்றுமையின் பால் அழையுஙகள். முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையை, அதிருப்தியை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவித் எதிர்ப்பு அலைகளையும் உணர்வுகளையும இஸ்லாமிய சமுதாயத்தின் எதிரிகளுக்கு எதிரானதாக குறிப்பாக அமெரிகக்hவுக்கும் சியோனிஸத்துக்கும் எதிரானதாக நெறிப்படுத்துங்கள் இதன் மூலமாக, முஷ்ரிக்கீன்களிலும் இருந்து விலகி நிற்கும் பிரகரணடத்தை உண்மைப்படுத்த முனையுங்கள்.
இறைவனின் வழிகாட்டல், அங்கீகாரம், உத்தி, அருள் என்பனவற்றை உங்களுக்கும் எனக்கும் தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
வஸ்ஸலாமு அலைக்கும்
செய்யது அலீ ஹூஸைனி காமெனெயீ
03 துல் ஹஜ் 1430

No comments:
Post a Comment